சின்னத்திரை பல கலைஞர்களை மக்கள் மற்றும் ரசிகர்களிடையே அறிமுகமாக்கி பின்பு சினிமா வட்டாரங்கள் மத்தியிலும் பிரபலப்படுத்தி வெள்ளி திரைக்கு அனுப்பி வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் இருந்து பல கலைஞர்கள் தற்போது சினிமாவில் சிறப்பாக ஜொலித்து வருகின்றனர். அதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்து சினிமாவில் பயணித்து வருபவர்கள் ஏராளம்.
ஆம் ரம்யா பாண்டியன், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, அஸ்வின் போன்ற பலரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்து சினிமாவில் பயணித்து வருகின்றன. அந்த வகையில் அவர்களைத் தொடர்ந்து காமெடி நடிகனாக வெள்ளி திரையில் கலக்கி வருபவர் புகழ். இவர் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாக இருந்தாலும்..
இவருக்கு என ஒரு அங்கீகாரத்தை கொடுத்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் பின் தற்போது சினிமாவில் பல டாப் நடிகர்களுடன் இணைந்து படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். அந்த வகையில் புகழ் அஜித் உடன் வலிமை, சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படங்களை தொடர்ந்து தற்போதும் பல படங்களில் காமெடியனாக கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் புகழ் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஆம் மிஸ்டர் ஜீ கீப்பர் என்ற ஒரு படத்தில் நிஜ விலங்குடன் புகழ் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடக்கும் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் மிக வேகமாக காமெடி நடிகராக வளர்ந்து வரும் புகழ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடிக்க ஆசை என தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசியது அப்படி நடிக்க முடியவில்லை என்றாலும் அவரை நேரில் சந்தித்தால் கூட போதும் என தெரிவித்துள்ளார்