Bala : சினிமாவில் இருக்கும் பெரும்பாலான இயக்குனர்கள் கமர்சியல் படங்களை கொடுத்து தன்னை நிலை நிறுத்திக் கொள்கின்றனர் ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் இயக்குனர் பாலா இவர் எடுக்கும் ஒவ்வொரு படமும் வித்தியாசமாகவும் யார் எடுக்காத ஒரு கதை எடுப்பார்.
அதனாலேயே இவருடையே படதிற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது இதுவரை இவர் எடுத்த படங்கள் சேது, அவன் இவன், நந்தா, நான் கடவுள், பரதேசி அனைத்து படங்களும் வெற்றி படங்கள் தான்.. இப்படி வித்தியாசமான படங்களை கொடுத்து வரும் பாலா..
சிறு இடைவேளைக்குப் பிறகு சூர்யாவை வைத்த வணங்கான் என்னும் படத்தை எடுத்தார். படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவுக்கும், இருவருக்கும் இடையே அதிக கருத்து வேறுபாடுகள் இருந்தது மேலும் சூர்யாவை அடிக்கடி ஓட சொல்லி உள்ளார் இதனால் கோபப்பட்ட நடிகர் சூர்யா..
ஒரு கட்டத்தில் இந்த படத்தில் நடிக்க முடியாது எனக் கூறி விலகினார் மேலும் தனது 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தையும் அதில் இருந்து விலக்கிக் கொண்டார். சூர்யாவுக்கு பதிலடி கொடுக்க தற்பொழுது பாலா அருண் விஜய் உடன் இணைந்து வணங்கான் கதையை படமாக எடுத்து வருகிறார் இந்த நிலையில் வணங்கான் படத்தின் கதை எப்படி இருக்கும் என்பது குறித்து நமக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.
அதன்படி அண்ணன் – தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து தான் வணங்கான் திரைப்படத்தை அவர் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. எப்பொழுதுமே வித்தியாசமான படங்களை கொடுத்து வரும் பாலா வணங்கான் படத்தில் அண்ணன் தங்கை பாசத்தை எப்படி காட்டப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் இந்த கதை பிடிக்காத காரணத்தினால் சூர்யா விலகினார் எனவும் கேட்டு வருகின்றார்