சூர்யாவை அடித்து துவம்சம் செய்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு..! அறிக்கை வெளியிட்ட பிரபல கட்சி நிர்வாகி மீது வழக்கு..!

siththamalli-2

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படமானது மாபெரும் சர்ச்சைக்குரிய திரைப்படமாக அமைந்துவிட்டது. பழங்குடி மக்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் எடுத்திருந்தாலும் இந்த திரைப்படத்தின் சில காட்சிகள் பலரையும் கோபம் முடி உள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பிரபல வன்னியர் சங்கத் தலைவரான குரு என்பவரின் பெயரை இந்த திரைப்படத்தின்  வில்லனுக்கு வைத்தது மட்டும் இல்லாமல் அவர் வீட்டில் வன்னியர் சங்க அடையாளமான அக்னி கலசம் இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

இதன் காரணமாக பாமக மற்றும் வன்னியர் சங்க  உறுப்பினர்கள் பலரும் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததுமட்டுமில்லாமல்  இதற்காக சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் மற்றும் நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் சூர்யாவை எட்டி உதைக்கும் நபருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசாக கொடுக்கிறேன் என மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி  கூறியது சமூக வலைதளப் பக்கத்தில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

இவ்வாறு அவர் பேசிய வார்த்தையின் மூலமாக பாமக செயலாளர் சித்தமல்லி பழனிசாமி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் வன்னியர் சங்கமும் பாமக உறுப்பினர்களும் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும்.

எந்த ஒரு பெரிய நடிகர்களும்  சூர்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை அந்த வகையில் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு கூட சூர்யாவின் குடும்பத்தார் அனைவரும்  கமலுக்கு ஆதரவாக பேசி இருந்தார்கள் அப்படி உதவி செய்த கமல் கூட இந்த விஷயத்தில் தலையிடவில்லை.

siththamalli-2
siththamalli-2