தமிழ் சினிமாவில் தற்போது உள்ள பல இயக்குனர்களும் வித்தியாசமான கதை களம் கொண்ட திரைப்படங்களை தான் இயக்கி வருகிறார்கள் அவ்வாறு இவர்கள் இயக்கும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் தனது திரைப்படம் ரசிகர்களுக்கு புரிய வேண்டும்.
என்ற காரணத்தினால் அபூர்வமாக திரைப்படம் எடுத்து வருபவர் செல்வராகவன் இவர் இயக்கிய திரைப்படங்களில் ஒரு சில திரைப்படங்கள் இரண்டாம் பாகம் வெளிவந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் பல ஆண்டுகளாக கூறி வருகிறார்கள்.
அந்த வகையில் பார்த்தால் இவரது இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வெளியான திரைப்படம் தான் ஆயிரத்தில் ஒருவன் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என ரசிகர்கள் பலரும் கேட்டு வந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாகவும் தனுஷ் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
இந்நிலையில் திடீரென செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார் அதில் ஆயிரத்தில் ஒருவன் உண்மையான பட்ஜெட் 18 கோடிகள் எனவும் ஒரு மெகா பட்ஜெட்டில் படமாக மிகைப்படுத்த வேண்டும் என்றால் 32 கோடி வரைபடமாக அறிவிக்க முடிவு செய்தோம்.ஆனால் இது ஒற்றுப் போகவில்லை இது மிகப் பெரிய முட்டாள்தனம் படத்தின் உண்மையான பட்ஜெட்டை வசூலித்தாலும் அது சரியாக கருதப்பட்டது.
The actual budget of #aayirathiloruvan was 18 crores. But we decided to announce it as a 32 crore film to hype it as a mega budget film. What stupidity! Even though the film managed to collect the actual budget it was regarded as average! Learnt not to lie whatever the odds are!
— selvaraghavan (@selvaraghavan) August 19, 2021
எனவும் முரண்பாடுகள் எதுவாக இருந்தாலும் பொய் சொல்ல கற்றுக் கொள்ளவில்லை என பதிவுசெய்துள்ளார் மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் செல்வராகவன் உண்மையை மட்டுமே பேசுவார் எங்களுக்கு தெரியும் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.