தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு சம அப்டேட் கொடுத்த களைப்புலி எஸ். தாணு.! உற்சாகத்தில் ரசிகர்கள்..

dhanush

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கடைக்கு வருபவர் தான் நடிகர் தனுஷ். தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தற்பொழுது பாலிவுட்,ஹோலிவுட் என திரைவுலகில் கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த த க்ரே மேன் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது.மேலும் இதன் மூலம் தனுஷ் சினிமாவில் தனது மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார் இந்த திரைப்படத்தின் அடுத்ததன் மூலம் திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் இவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் நாளை தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டம் மிகவும் கோலாகலமாக கொண்டாட இருகிறது. இவருடைய ரசிகர்களும் இவரை பிறந்த நாளை மிகவும் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். மேலும் தற்பொழுதே தனுஷை பற்றிய ஏராளமான தகவல்கள் வைரலாக ஆரம்பித்துள்ளது.

அந்த வகையில் நாளை தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு மாலை 6 மணிக்கு ‘வாத்த’ படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தனுஷ் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் தனுஷ் நடித்து வரும் இன்னொரு திரைப்படமான ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தனுசுக்காக பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிய முக்கிய அப்டேட்டை தெரிவித்துள்ளார்.

அது குறித்து தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பதாவது நாளை பிறந்தநாள் காணும் திரு தனுஷ் மென்மேலும் பல உயர்வுகளை தொட்டு சிறப்போடு வாழ என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் இந்த நாளை மேலும் சிறப்பாக்க ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் கூறியுள்ளார்.

naane varuven
naane varuven

மேலும் அட்டகாசமான தனுஷின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டர் இணையதளத்தில் வைரலாக தொடர்ந்து ரசிகர்கள் தங்களது தோன்றிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.தனுஷ் நடித்து வரும் நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டப்பட பிடிப்பதற்கான வேலைகள் நடைபெற இருக்கிறது என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த திரைப்படம் தனுஷின் மிகப்பெரிய வெற்றிக்குரிய திரைப்படமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.