தளபதி விஜய் தற்பொழுது லியோ திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இவருடைய திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் நடிகை தற்பொழுது நடு ரோட்டில் இசை கேட்ப ஆட்டம் போட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களாக காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர்களை அடுத்து பிரியா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இணைந்து இந்த படத்தின் நடித்து வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு அபிராமி வெங்கடாசலம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தான் லியோ படத்தில் நடிக்க இருப்பதை உறுதி செய்தார்.
இந்நிலையில் நேற்று சிவராத்திரியை முன்னிட்டு உலகம் எங்கும் மிகவும் விமர்சியாக பலரும் கொண்டாடி வந்த நிலையில் அபிராமி ஆந்திராவில் உள்ள காலகஸ்தி கோவிலுக்கு சென்று அங்கு தெருவில் கொட்டு அடித்துக் கொண்டிருக்கும் பொழுது அவர்களுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டு ஆடி உள்ளார்.
மேலும் அங்கு இருக்கும் ரசிகர்களுடனும் செல்பி எடுத்துக் கொண்ட நிலையில் இதனை அபிராமி வெங்கடாசலம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் காலகஸ்தியில் சிவராத்திரி கொண்டாடி வருகிறேன், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, தென்னாடுடைய சிவனை தரிசனம் செய்துவிட்டு இங்கு இருந்த நேராக காஷ்மீருக்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு அபிராமி அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்தார் அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் தற்பொழுது அவருக்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..