தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் தன்னுடைய படங்களின் மூலம் பலமுறை மோதிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது அஜித் நடித்து வரும் துணிவு படமும் விஜயின் வாரிசு திரைப்படமும் பொங்கல் தினத்தன்று வெளியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு அஜித்தின் வீரம் மற்றும் விஜயின் ஜில்லா படங்கள் பொங்கல் தினத்தன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அதன் பின்னர் 8 வருடங்கள் கழித்து உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தற்போது போட்டியிட உள்ளதால் ரசிகர்கள் இதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இதற்கிடையில் விஜயின் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை ஒட்டி வெளியாகும் என படத்தின் அறிவிப்பின்போது வெளியிட்டிருந்தனர் அதே நேரத்தில் அஜித்தின் துணிவு திரைப்படம் தீபாவளியை ஒட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனதால் கடைசியாக படத்தை பொங்கலை ஒட்டி களத்தில் இறக்க பட குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அஜித், விஜய் படங்களுக்கு நேரடியாக மோதல் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகும் என்பதால் தியேட்டர் ஓனர்கள் கூடுதல் நெருக்கடிக்கு ஆளானார்கள். இதனால் இரு உச்ச நடிகர்களின் படத்திற்கு சம அளவு தியேட்டர்கள் ஒதுக்கி தரப்படும் என கூறப்படுகிறது இது குறித்து சோசியல் மீடியாவில் வெளியான தகவலின் படி அஜித்தின் துணிவு படம் ஜனவரி 12ஆம் தேதி வியாழன் கிழமை வெளியாக உள்ளது எனவும் அதே சமயம் ஜனவரி 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளதாகவும் தியேட்டர் ஓனர்கள் கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டனர் இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.