மே 7 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறப்பு முன்னிட்டு சரக்கு வாங்க அடையாள அட்டைகைகளில் ஏதேனும் ஒன்று கட்டாயம்.! அரசு அதிரடி அறிவிப்பு.!

tasmac-tamil360newz
tasmac-tamil360newz

On May 7, one of the cards is mandatory to buy liquor: கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 50 நாட்களுக்கு மேல் இயங்காமல் இருந்த மதுபான கடைகள் மீண்டும் நாளை  திறப்பதாக அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுபான கடைகளுக்கு வரும் பொதுமக்கள் சில விதிமுறைகளை பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதாவது மதுபானம் வாங்க வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும் தங்களது அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக எடுத்து வரவண்டும். ஆதார், வாக்காளர் அடையாள அட்டை,  ஸ்மார்ட் கார்டு, ரேஷன் கார்டு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் அனைவரும் கொண்டுவர வேண்டுமென மாவட்ட கண்காணிப்பாளர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டத்தை சேர்ந்த மதுபான கடைகள் திறக்கப்படததற்கு காரணம் சென்னைக்கு மிக அருகில் உள்ளதாலும், மக்களின் நலன் கருதியும், மேலும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகம் உள்ள இடம் என்பதால் சமூக விலகலை பின்பற்ற மிகவும் கடினமாக இருக்கும் என்ற காரணத்தினால் குன்றத்தூர் மட்டும் திருப்பெரும்புதூர் வட்டங்களில் உள்ள தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் திறக்க படமாட்டாது என அரசு அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல்  மாவட்ட ஆட்சியாளர் கூறுகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 49 டாஸ்மாக் கடைகள் உள்ளது எனவும் அதில் 16 கடைகள் மட்டுமே ஏழாம் தேதி திறக்கப்படும் என அறிவித்துள்ளார். அதாவது குன்றத்தூர் மற்றும் திருப்பெரும்புதூர் வட்டத்திலுள்ள அனைத்து கடைகளும் சென்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரணத்தினால் திறக்கப்பட மாட்டாது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.