Vijay sethupathi: சினிமாவைப் பொறுத்தவரை நடிகர், நடிகைகள் மீது சர்ச்சைகள் இருந்து வருவது வழக்கம் அதிலும் முக்கியமாக பாலிவுட் சொல்லவே தேவை இல்லை. தொடர்ந்து நடிகர், நடிகைகள் சர்ச்சைகளை சிக்கி வருகின்றனர். அப்படி தற்பொழுது ஏராளமான பாலிவுட் நடிகைகள் கர்ப்பமானதற்குப் பிறகு திருமணம் செய்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் இவ்வாறு இதுதான் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட் நடிகை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாக பிரபலம் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீப காலங்களாக விஜய் சேதுபதி பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வரவேண்டும் என்பதற்காக நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் உதாரணமாக அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நடிகை நயன்தாராவும் பாலிவுட் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
இந்த படத்தினை அடுத்து விஜய் சேதுபதி மேரி கிறிஸ்மஸ் என்ற படத்தில் கத்ரீனா கைஃப்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவ்வாறு இவருடைய வளர்ச்சி பிடிக்காத ஒரு சிலர் தொடர்ந்து விஜய் சேதுபதி குறித்த சர்ச்சைக்குரிய தகவல்களை சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர். இவரைப் போலவே நடிகர் கமலஹாசன் பாலிவுட் சினிமாவிற்கு அறிமுகமாகும் பொழுது பல இன்னல்களை சந்தித்தார்.
இந்நிலையில் உமர் சந்து என்ற பிரபலம் நடிகர் விஜய் சேதுபதி நடிகை கத்ரீனா கைஃப்புக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு இதனைப் பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து உமர் சந்துவை திட்டி தீர்த்து வரும் நிலையில் இதற்கு விஜய் சேதுபதி பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.