சினிமாவில் என்ட்ரி ஆவதற்கு முன்பாக காமெடி நடிகர் ஆர் ஜே பாலாஜி எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் – பார்த்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்.

rj-balaji
rj-balaji

தமிழ் சினிமாவில் பல்வேறு காமெடியன்கள் இருந்தாலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து காமெடியில் கலக்கி வருபவர் ஆர் ஜே பாலாஜி. இவர் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தில் நடித்து அறிமுகமானார்.

அந்த படத்தை தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இது என்ன மாயம், வடகறி, நானும் ரவுடிதான் போன்ற பல்வேறு திரைப்படங்களில் காமெடியனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். தமிழ் சினிமாவில் இப்படி ஓடி கொண்டிருந்த இவர் திடீரென ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் தமிழில் வர்ணனையாளர் ஆகவும் அவதாரம் எடுத்தார்.

அதன் மூலம் கோடானகோடி ரசிகர்களை தன் பேச்சின் மூலம் கவர்ந்து இழுத்தார். தற்போதும் அதில் பணியாற்றி வருகிறார்.  ஒரு பக்கம் இருந்தாலும் சினிமாவிலும் தற்போது படங்களில் நடிப்பதையும் தாண்டி இயக்கியும் வருகிறார் அந்த வகையில் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டார்.

மேலும் இந்த திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஹிந்தியில் வெற்றி அடைந்த பதாய் ஹோ என்ற படத்தை தமிழில் தற்போது ரீமேக் செய்து இருக்கிறார் நடிகர் ஆர் ஜே பாலாஜி.

இந்த நிலையில் நடிகர் ஆர் ஜே பாலாஜி சினிமா உலகில் அடி எடுத்து வைப்பதற்கு முன்பாக இவர் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகி உள்ளனர் மிக மெல்லிய தோற்றத்தில் ஆளு வேற மாதிரி இருக்கும் ஆர் ஜே பாலாஜி  அந்த புகைப்படம் இதோ.

rj-balaji
rj-balaji