அட இந்த மெகா ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறதா.! டிஆர்பி யில் அடி வாங்குமா சன் தொலைக்காட்சி

sun-tv-serial
sun-tv-serial

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஒரு தொலைக்காட்சி என்றால் அது சன் தொலைக்காட்சி தான் ஏனென்றால் டி ஆர் பி யில் முதல் 10 இடங்களில் ஒரு இடத்தை பிடித்துள்ளது சன் தொலைக்காட்சி. அதிலும் குறிப்பாக இதில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுமே ஹிட்டான சீரியல்கள் தான்.

இதில் ஒளிபரப்பாகும் சில தொடர்கள் ஆயிரம் முதல் 2000 எபிசோடுகளை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு ரசிகர்களும் தங்களால் முடிந்த ஆதரவை கொடுத்து வருகின்றனர். மேலும் சன் டிவியில் சந்திரலேகா போன்ற பல தொடர்கள் பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது ஆனால் தற்போது சன் டிவி ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி வந்துள்ளது.

அதாவது தற்போது சன் டிவியில் டிஆர்பி யில் டாப்பில் இருக்கும் ஒரு தொடர் ரோஜா தொடர் தான். இந்த தொடர் தற்போது முடிவுக்கு வர இருக்கிறதாக தகவல் வெளியாகியுள்ளது இதனால் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் ரோஜா சீரியல் முடிவுக்கு வருகிறதா வேண்டவே வேண்டாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். சன் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ரசிகர்களுக்கு பிடிக்காமல் ஓடிக் கொண்டிருக்கிறது அப்படி அந்த சீரியல்களை தூக்குங்கள்.

தற்போது நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் ரோஜா சீரியல் ரசிகர் மத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது அதனால் இந்த சீரியலை நிறுத்த வேண்டாம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர் அது மட்டுமல்லாமல் இதனால் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளதாகவும் கூறி வருகின்றனர்.

ஆனால் சன் தொலைக்காட்சி இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இதனால் இன்னும் ஒரு சில மாதங்கள் இந்த தொடர் ஓடிக் கொண்டுதான் இருக்கும் என கூறப்படுகிறது.