தமிழ் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது அது மட்டுமல்லாமல் வசூலை வாரி குவித்தது.
இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியாக உள்ள சர்தார் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இதனால் இந்த இரண்டு படங்களும் ஒன்றுடன் ஒன்று நேரடியாக மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது அது மட்டும் அல்லாமல் இந்த படம் நடிகர் கார்த்திக் அவர்களுக்கும் சிவகார்த்திகேயன் அவர்களுக்கும் ஒரு சவாலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஒரு படம் அயலான் இந்த திரைப்படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனரான ரவிக்குமார் அவர்கள் இயக்கியுள்ளார் . இந்தப் படத்தில் ரகுல் பிரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் அயலான் திரைப்படம் கொரோனாவின் தாக்கத்தால் படப்பிடிப்பு பாதியில் கைவிடப்பட்டது. அதன் பிறகு மீண்டும் படபிடிப்பை தொடங்கிய நிலையில் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டது. ஒரு வழியாக தற்போது இந்த படத்தை எடுத்து முடித்து உள்ள நிலையில் சிஜி வேலைகள் மீதம் இருக்கிறதாம்.
இது பற்றிய நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூறுகையில் தமிழ் சினிமாவில் அயலான் படம் மாதிரி எந்த ஒரு படமும் இருக்காது அது மட்டுமல்லாமல் இது போன்ற படத்தை நீங்கள் பார்த்திருக்க கூட முடியாது என்ற பில்டப் பண்ணி கூறியுள்ளார்.
ஏனென்றால் இப்படம் ஏலியன், கிராஃபிக்ஸ், அனிமேஷன், படமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் அயலான் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்த வருடம் வெளியாகாமல் அடுத்த வருடம் தான் வெளியாகும் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அயலான் படத்தை பற்றி ஓவர் பில்டபாக்க கூறியதால் ரசிகர்கள் இதை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர்.