அட நயன்தாராலாம் சும்மாப்பா எங்கள வச்சிதான் நல்ல சம்பாதிதாங்க உண்மையை கூறிய ரவீந்தர்.!

mahalakshmi-ravindran
mahalakshmi-ravindran

சீரியல் நடிகையும் பிரபல தயாரிப்பலருமான ரவீந்தர் மகாலட்சுமி ஆகிய இருவரும் சமிபத்தில் திருமணம் செய்துகொண்டது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. திருமணம் முடிந்த கையோடு இந்த தம்பதியினர் குலதெய்வம் கோயிலுக்கு சென்று விட்டு உடனே பத்திரிக்கையாளரை சந்தித்த ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் பேட்டி தான் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

தயாரிப்பாளர் ரவீந்திரனை பணத்துக்காக தான் திருமணம் செய்து கொண்டார் மகாலட்சுமி என்ற கேள்வி எழுப்பப்பட்டது அதுமட்டுமல்லாமல் அவர்களை மோசமாக ட்ரோல் செய்தனர். சன் மியூசிக் இன் முன்னாள் விஜெவும் சன் டிவியின் சீரியல் நடிகையுமான மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

இந்த நிலையில் மகாலச்மியும் ரவீந்தரும் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி லிப்ரா ப்ரோடக்சன் தயாரிப்பாளர் ரவீந்திரநாத் இரண்டாவது ஆக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும்  திருப்பதியில் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இதே போல் இவர்களுக்கு முன்பாகவே திருப்பதியில் திருமணம் செய்ய நயன்தாரா முடிவெடுத்துள்ளார் அது மட்டுமல்லாமல் அவர்களுடைய திருமணத்திற்கு தேவையான வேலைகளையும் செய்து வந்தார்.

ஆனால் ஒரு சில காரணங்களால் நயன்தாராவின் திருமணம் திருப்பதியில் நடைபெறாமல் சென்னையில் உள்ள ஒரு பிரம்மாண்ட ஹோட்டல் நடந்தது. மேலும் நயன்தாராவின் திருமண வீடியோ கூட  வெளியாகவில்லை எங்களோட வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலானது என்று தயாரிப்பாளர் ரவீந்தர் கூறியுள்ளார்.

மேலும் ரவீந்தர் எங்களுடைய திருமணத்தை வைத்து பலரும் சம்பாதித்து உள்ளார்கள் அது மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவில் உருவ கேலி செய்தும் ட்ரோல் செய்தும் சம்பாதித்தார்கள் என்று தயாரிப்பாளர் ரவீந்திரன் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் கூறிவிட்டு சோகமாக கூட இல்லை சிரித்தபடியே அங்கிருந்து சென்று விட்டாராம்.