தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன் பிறகு பிரசாந்த் நடிப்பில் வெளியான வின்னர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை கிரண் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.
அதன் பிறகு கவர்ச்சி நடிகை என்று முத்திரை குத்தப்பட்ட நடிகை கிரண் சினிமாவில் சரிவர படங்களில் நடிக்க முடியாமல் போனது. அதற்குக் காரணம் அவருடைய கவர்ச்சி தான் என கூறப்படுகிறது இந்த நிலையில் எப்படியாவது பட வாய்ப்பு பெற வேண்டும் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
பொதுவாக சினிமா வாய்ப்பிற்காக பல நடிகைகள் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் தான் ஆனால் நடிகை கிரண் கொஞ்சம் கவர்ச்சியை அதிகமாக காட்டுவார் இதனால் பல ரசிகர்களின் முகம் சுளிக்கும் வகையில் அந்த புகைப்படம் இருக்கும்.
இந்த நிலையில் கிரண் சம்பாதிக்க என்ன செய்வதென்றே தெரியாமல் தற்போது வேறு ஒரு வழியை கண்டுபிடித்துள்ளார் அதாவது ஒரு செயலியை உருவாக்கி அந்த செயலில் மூலம் தற்போது பணத்தை சம்பாதித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அந்த செயலியில் ஒவ்வொன்றுக்கும் தனி தனி விலைப்பட்டியல் போடப்பட்டுள்ளது.
அதாவது முதலில் அந்த செயலியியை பயன்படுத்த வேண்டும் என்றால் 49 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதன் பிறகு அந்த செயலில் ஆயிரம் ரூபாய் கட்டினால் கிரனின் இரண்டு கவர்ச்சி படங்கள் அனுப்பப்படும். மேலும் கிரணுடன் ஐந்து நிமிடம் பேச வேண்டும் என்றால் பத்தாயிரம் ரூபாய் வசூலிக்கப்படும் அதேபோல் அவருடன் வீடியோ காலில் பேச வேண்டும் என்றால் 14,000 வசூலிக்கப்படும்.மேலும் கூடுதல் வீடியோ காலில் 25 நிமிடங்கள் பேச வேண்டும் என்றால் 25 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும் என்று விலை பட்டியலை போட்டுள்ளார்.
இதனை நம்பி பலர் ரசிகர்கள் ஏமாந்து விட்டனர் அது மட்டும் இல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இது நமக்கு தேவையில்லை என்று எண்ணி அவரை திட்டிட்டு இருக்கின்றனர். இவர் செய்த இந்த காரியத்தால் முன்பெல்லாம் நடிகைகள் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டால் அது படத்திற்கு வாய்ப்பு கேட்பது என்று நினைத்துக் கொண்டு சாதாரணமாக விட்டு விடுகிறார்கள் ஆனால் கிரண் செய்த இந்த செயலால் பல நடிகைகளை இது போன்ரே சித்தரிக்கிறார்கள்.