விவாகரத்திற்கு பிறகு தனது மகளைக் கரை சேர்க்க நடிகை சித்ரா துவங்கிய தொழில் என்ன தெரியுமா..!

chithra-1

90ஸ் காலகட்டத்தில் மிகப் பிரபலமான நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை சித்ரா இவ்வாறு பிரபலமான பல நடிகைகளும் தற்போது இருந்த இடம் தெரியாமல் இருந்து வருகிறார்கள் ஆனால் 90ஸ் கால கட்டத்தில் நடித்த நடிகைகள் தற்போது என்ன செய்கிறார்கள்  எப்படி இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள அனைவருக்கும் ஆர்வமாக தான் இருக்கும்.

அப்படி புகழ்பெற்ற நடிகை சித்ராவை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம் நடிகை சித்ரா கேரளாவில் கொச்சி என்ற இடத்தில் பிறந்தவர் இவர் 1975ஆம் ஆண்டு தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்க ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் தமிழில் சேரன் பாண்டியன், பொண்டாட்டி ராஜ்ஜியம், சின்னவர், திருப்புமுனை, என் தங்கச்சி படிச்சவ, ஊர்க்காவலன் போன்ற பல்வேறு தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நல்லெண்ணெய் கம்பெனி விளம்பரத்தில் நடத்ததன் மூலமாக சித்ராவை பலரும் நல்லெண்ணெய் சித்ரா என பட்டபெயர் உபயோகித்து அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். பொதுவாக கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு வருவது வழக்கம்தான்.

அதேபோல நமது நடிகையின் வாழ்க் கையிலும் பல்வேறு சண்டைகளும் சந்தேகங்களும் வந்ததன் காரணமாக இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். ஆனால் அப்போது நடிகை சித்ராவிற்கு பள்ளி செல்லும் வயதில் ஒரு மகள் இருந்தாள்.

இதன் காரணமாகத்தான் திரைப்படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு சென்னை சாலிகிராமம் பக்கத்தில் ஒரு ஹோட்டலை திறந்தார் அந்த ஹோட்டலுக்கு இஎஸ் சிக்கன் என பெயர் வைத்து கடையும் வீட்டையும் கவனித்துக் கொண்ட சித்ரா கஸ்டமர் ஆர்டர் செய்தால் வீடு தேடி உணவு செல்லும் அளவிற்கு தன்னுடைய ஹோட்டலை வளர்த்தார்.

இப்படி கஷ்டப்பட்டு தான் தன்னுடைய மகளை படிக்க வைத்தார் இவ்வாறு பிரபலமான நமது நடிகையின் மகளை பார்த்த ரசிகர்கள் பலரும் பூரித்துப் போய் விட்டார்கள்.

chithra
chithra