பயங்கரமாக இணையத்தில் வெளிவந்த ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி இதோ.!

தமிழ் சினிமாவில் என்னதான் பல இயக்குனர்களும் பலவகையான கதை அம்சங்களைக் கொண்டு பல திரைப்படங்களை இயக்கி வந்தாலும் தனது திரைப்படம் தனியாக தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் புதிய கதையம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர் தான் மோகன்ஜி இவரது இயக்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு திரௌபதி என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

என்னதான் இந்த திரைப்படம் பல சர்ச்சைகளை பெற்றாலும் மோகன்ஜி மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மோகன் ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்திலும் ரிச்சர்ட் ரிஷி தான் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்.

இந்த திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்து வந்ததை நாம் பார்த்திருப்போம் இந்தத் திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜி பின் இசை அமைத்துள்ளார் இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலரும் கேட்டு வந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என இயக்குனர் மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இதனை  பார்த்த ரசிகர்கள் பலரும் தற்போது ஒரே கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்  ஏனென்றால் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு மக்கள் மிக ஆர்வமாக இருந்த நிலையில்.

பலரும் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வராதா என எதிர்பார்த்து வந்த நிலையில் திடீரென ரசிகர்களுக்கு இயக்குனர் மோகன் சப்ரைஸ் தந்துள்ளார்.இப்படி இருக்கும் நிலைமையில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானால் மக்கள் நல்ல வரவேற்பு தருவார்கள் என்பது மட்டும் தெரிகிறது.