பிக் பாஸ் சீசன் 4 நடிகர் நடித்துள்ள திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு.! ரசிகர்கள் கொண்டாட்டம்.

bigg boss 4
bigg boss 4

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல நடிகர்,நடிகைகள் பிரபலமடைந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்கள். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4 கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகர் ரியோ ராஜ்.

இவர் விஜய் டிவியில் நீண்ட வருடங்களாக தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். பிறகு நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன்4 கலந்து கொண்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். அந்த வகையில் 100 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் இருந்து மூன்றாவது வெற்றியாளராக பங்கு பெற்றார்.

இந்நிலையில் இவர் நடித்து வந்த பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்டது. எனவே இத்திரைப்படம் ஏப்ரல் 30ஆம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

rio raj 5
rio raj 5

இத்திரைப்படத்தில் ரியோ ராஜுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன், காமெடி நடிகர்களான பாலா சரவணன் மற்றும் ரோபோ ஷங்கர் பிறகு குக் வித் கோமாளி பிரபலம் தங்கதுரை உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து இத்திரைப்படத்தில் நடித்து உள்ளார்கள்.

rio raj 3
rio raj 3

இத்திரைப்படத்தை பானாகாத்தாடி திரைப்படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே ரியோ பிக்பாஸ் நிகழ்ச்சி வீட்டில் இருக்கும் பொழுது இத்திரைப்படத்தை  பற்றி கூறப்பட்டது.