கையில் தீ பந்தத்துடன் கமல், எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

H.VINOTH
H.VINOTH

தெலுங்கில் முன்னணி நடிகர்களான பிரபாஸ், அமிதாப் பச்சன் நடித்து வரும் ப்ராஜெக்ட் கே படத்தில் வில்லனாக கமலஹாசன் அவர்கள் நடித்து வருகிறார். தற்பொழுது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் கமலஹாசன் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு முடிந்து பொங்கல் அல்லது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தினை தொடர்ந்து தெலுங்கு முன்னணி நடிகர்களான பிரபாஸ், அமிதாப் பச்சன் நடித்துவரும் ப்ராஜெக்ட் கே படத்தில் எதிர்மறை கேரக்டரில் கமலஹாசன் நடித்து வருகிறார். இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் அண்மையில் வெளியானது இந்த படத்தினை தொடர்ந்து கமலஹாசனின் 233வது படத்தினை மணிரத்தினம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இதற்கு முன்பு இயக்குனர் ஹச் வினோத்துடன் இணைய இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் கடந்த மாதம் கமலஹாசன் மற்றும் ஹச் வினோத் ஆகிய இருவரும் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலஹாசனின் அலுவலகத்தில் தேசிய நெல் திருவிழா 2023 விழாவை முன்னிட்டு விவசாயிகளை சந்தித்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர் எனவே இதனால் கமலஹாசனின் 233வது படத்தினை ஹச் வினோத் தான் இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டது.

KH233 MOVIE
KH233 MOVIE

மேலும் இந்த படம் விவசாயத்தை சார்ந்து கதைகளாக அமைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ள நிலையில் இன்று அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிறிய வீடியோ ஒன்றில் சிவப்பு வண்ணம் அடங்கிய பின்னணியில் கமலஹாசன் கையில் தீப்பந்தம் வைத்துக் கொண்டுள்ளார் மேலும் தற்காலிகமாக இந்த படத்திற்கு KH233 எனவும் தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

KH233 KAMAL
KH233 KAMAL

இதற்கு கீழ் ‘rise to rule ‘ என்ற கேப்டன் இடம் பெற்று இருக்கிறது இந்த படத்தினை கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ஆர் மகேந்திரன் உடன் இணைந்து தயாராக இருக்கிறது இந்த படத்திற்கு கமலஹாசன் வடிவம் கொடுத்திருக்கும் நிலையில் ஹச்.வினோத் எழுதி இயக்க உள்ளார்.