நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருஞ்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனையை படைத்தது அந்த வகையில் கடந்தாண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் 7வது இடத்தை திருச்சிற்றம்பலம் பிடித்தது.
இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தனுஷ் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் இவர் தனது மகன்களுடன் திருப்பதி சென்று முடி காணிக்கை செய்துவிட்டு ருத்திராட்ச மாலையை அணிந்திருந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. இந்நிலையில் தற்பொழுது தனுஷின் 50வது படத்தை மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் தகவல் வெளியானது.
அதே நேரத்தில் பா பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் எந்த படத்தையும் இயக்காமல் இருந்து வரும் நிலையில் இந்த படத்தினை இவர் இயக்க இருக்கிறாராம். இந்த படத்தில் எஸ். ஜே சூர்யா, விஷ்ணு விஷால் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு ராயன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வைரலாகி வருகிறது.
ஆனால் பேட்டி ஒன்றில் இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என விஷ்ணு விஷால் மறைமுகமாக கூறியிருக்கிறார் ஆனால் கண்டிப்பாக தனுஷ் மற்றும் தரப்பிலிருந்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இன்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய போஸ்டர் ஒன்றுடன் படப்பிடிப்பை துவங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தனுஷின் 50வது படமாக உருவாக்க இருக்கும் இந்த படத்தை அவரே எழுதி அவரே இயக்க உள்ளார். நடிகர் தனுஷ் திருப்பதியில் முடி காணிக்கை செய்துவிட்டு ருத்ராட்ச மாலை அணிந்திருக்கும் புகைப்படங்கள் வைரலான நிலையில் அதே கெட்டப்பில் தான் தற்பொழுது சன் பிக்சர்ஸ் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு இதனை வைத்து இது தனுஷ் தான் என தெரியாத வகையில் அமைந்துள்ளது இந்த படத்தில் தனுஷ் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க இருக்கும் நிலையில் இதில் எஸ். ஜே சூர்யா, சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் போன்றவர்களும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தனது இரண்டாவது படத்தினை தனுஷ் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#D50 – A @dhanushkraja Directorial 🔥 Shoot Begins! pic.twitter.com/LTsbdcFEw4
— Sun Pictures (@sunpictures) July 5, 2023