கமலஹாசன் பயன்படுத்தும் கேரவனில் இத்தனை சிறப்பு அம்சங்கள் உள்ளதா.? மிரண்டுப்போன ரசிகர்கள்

kamal
kamal

உலகநாயகன் கமலஹாசன் சினிமா உலகில் தொடர்ந்து படங்களில் நடித்து உள்ளார், நடித்தும் வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று அதிக நாட்கள் ஓடியது மேலும் வசூல் ரீதியாகவும் 400 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார்.

அதனை தொடர்ந்து தேவர்மகன் 2, சபாஷ் நாயுடு ஆகிய படங்கள் கைவசம் இருப்பதாக சொல்லப்படுகிறது. சினிமாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் உலகநாயகன் கமலஹாசன் அரசியல், வியாபாரம் போன்றவற்றிலும் சிறப்பாக பயணிக்க பல யூகங்களை பகிர்ந்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் உலக நாயகன் கமலஹாசன் பயன்படுத்தும் கேரவன் குறித்து தற்போது தகவல் ஒன்று கிடைத்துள்ளது .

அது குறித்து தற்போது விலாவாரியாக பார்ப்போம். கமலஹாசன் பயன்படுத்தும் கேரவன் தனித்துவமாக வடிமைக்கப்பட்டுள்ளது. கமல் பயன்படுத்தும் இந்த சொகுசு கேரவனில் கிட்டத்தட்ட நான்கு திசைகளிலும் குளிர் காற்று வரும்படியான தன்மை கொண்ட ஏசி பொருத்தப்பட்டு இருக்கும். இந்த கேரவனை அண்மையில் மகாபலிபுரத்திற்கு வந்த நரேந்திர மோடி பயன்படுத்தினார்.

அவர் மட்டும் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் ஏதாவது அவசர தேவைகள் என்றால் இந்த கேரவனை தான் அனுப்பி வைப்பார்களாம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கேரவன் ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டுள்ளது 7 மினி ஸ்டார் ஹோட்டலை போல் ஆடம்பரமாய் இருக்கும் இந்த கேரவனில் மேக்கப் போடுவதற்கு என்று தனி இரண்டு அறைகள் இருக்கிறதாம்.

அதுபோக இயக்குனர், தயாரிப்பாளர்கள் என எவரேனும் திடீரென வந்தால் அவர்களை உட்கார வைக்க ஒரு தனி ஒரு மீட்டிங் அறையும் இருக்கிறதாம் ஒவ்வொரு ரூமிற்கும் ஒவ்வொரு ஸ்பேர் ஏசியும் உள்ளதாம். இந்த கேரகனை ஓட்டுவதற்கு என்ற பயிற்சி பெற்ற டிரைவர்கள் தான் பணி அமர்த்தப்படுவார்கள் அது மட்டும் இந்த டெக்னிக்கலான விஷயங்களையும் கையாளுவதற்கு தனி பயிற்சிகள் வழங்கப்பட்டு ஓட்டுநர்கள் ஒப்பந்தம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.