நடிகர் விக்ரம் தனது சினிமா பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் ஒவ்வொரு படத்தின் கதைக்காக தனது உடல் எடையை ஏற்றியும் குறைத்தும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது அவர் வழக்கம் அதனால் தான் அவரது படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்களாக மாறுகிறது..
மேலும் ரசிகர்களையும் தாண்டி விக்ரம் படத்தை பார்க்க குடும்ப ஆடியன்ஸ்கள் அதிகமாக இருக்கின்றனர். இவர் நடிப்பில் கடந்த மூன்று வருடங்களாக உருவான திரைப்படம் தான் கோப்ரா. இந்த படத்தில் விக்ரமுடன் கைகோர்த்து இர்பான் பதான், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன், கே எஸ் ரவிக்குமார்.
மற்றும் ரோபோ சங்கர், பாபு ஆண்டனி, ரவீனா ரவி, கனிகா, ஜான் விஜய், பூவையார் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். இந்த படத்திற்காக நடிகர் விக்ரம் ஒன்பது விதமான கெட்டப்புகளில் நடித்து அசதி இருந்தார். இந்த படம் ஒரு வழியாக ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது 100 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம்..
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் ஆரம்பத்திலேயே நல்ல வசூலை அள்ளி உள்ளது. வருகின்ற நாட்களில் இந்த படத்தில் வசூல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு தான் இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரமின் கோப்ரா படம் ஆறு நாள் முடிவில் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி பார்க்கையில் கோப்ரா திரைப்படம் ஆறு நாள் முடிவில் உலக அளவில் மட்டுமே சுமார் 48 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமே இந்த திரைப்படம் இதுவரை 28 கோடி வசூலித்துள்ளதாம். வருகின்ற நாட்களில் இன்னும் சில கோடிகளை அள்ளி கோப்ரா திரைப்படம் அசத்தும் என நம்பப்படுகிறது.