கோடி கோடியாக மூன்று மடங்கு பணத்தை கொட்டி தருகிறேன் எனக் கூறிய O. T. T.!! அப்படியே திரும்பி பார்க்காமல் கிளம்ப சொன்ன தளபதி.!

master-vijay 1-tamil360newz
master-vijay 1-tamil360newz

O.T.T., who promised to give vijay three times as much money as crores: தமிழ் சினிமாவே  தற்பொழுது O.T. T-யை கண்டு மிரண்டு போய் உள்ளது. இதற்கு தற்பொழுது பல காரணங்கள் இருக்கிறது ஏனென்றால் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை இதில் ஒளிபரப்பினால் தமிழ் சினிமாவே அழியும் நிலை உண்டாகிவிடும். ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள்வந்தாள் என்ற திரைப்படத்தை o.t.t யில் வெளியிடப்போவதாக கிட்டத்தட்ட உறுதியாகியது. ஆனால் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இப்படி ஹிட் கொடுக்க வேண்டிய திரைப்படங்களை O. T. T யில் ஒளிபரப்பி விட்டாள் நாளை திரையரங்கை இழுத்து மூட வேண்டிய அபாயம் ஏற்படும். தொழிலாளர்கள் வேலை இழப்பு, சினிமா துறையில் இருக்கும் ஊழியர்கள் வேலை இழப்பு என அதுமட்டுமில்லாமல் சம்பளம் கோடிகளில் பெறமுடியாது என பல பிரச்சனைகள் இருக்கிறது.

அப்படியிருக்க விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தை மூன்று மடங்கு அதிக லாபம் தருவதாக கூறி பேரம் பேசப்பட்டுள்ளது, ஆனால் இதனை படக்குழு வேண்டாமென மறுத்துள்ளது. அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. முதலாக ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் சந்தோஷத்தையும் பூர்த்தி செய்ய முடியாது. இந்த o.t.t யில் படத்தை வெளியிட்டால்.

மேலும் வினியோகஸ்தர்களிடமிருந்து தயாரிப்பாளர்கள் ஏற்கனவே சில கோடிகளை வாங்கி உள்ளார்கள். இதனால் அவர்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கை தவிடு பொடியாகிவிடும், அதேபோல் படத்தை இதில் வெளியிட்டால் பல நடிகர்களின் அரசியல் கனவு கனவாகவே புதைக்கப்படும். இப்படி பல காரணங்களைக் கூறிக் கொண்டே போகலாம்.

மேலும் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திற்கு மூன்று மடங்கு லாபத்தை விட  அதிக பணத்தை தருகிறேன் என கூறியதற்கு காரணம் இப்படி முன்னணி நடிகரின் திரைப்படத்தை வெளியிட்டு விட்டால், அடுத்தடுத்து வரும் நடிகர்களின் திரைப்படத்தையும் வெளியிட்ட விடலாம். அதனால் சினிமாவையே கைப்பற்றி விடலாம் என்பதுதான் கார்ப்பரேட் நிறுவனங்களின் எண்ணம்.

ஆனால் மாஸ்டர் திரைப்படத்தைப் பொறுத்தவரை தயாரிப்பாளர்கள் மற்றும் தளபதி விஜய் எந்த ஒரு காரணத்திற்காகவும் எந்த ஒரு சூழ்நிலையிலும் O. T. T யில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக மட்டுமே இந்த திரைப்படத்தை வெளியிடுகிறோம். அதனால் கண்டிப்பாக திரையரங்கில் மட்டும்தன் திரைப்படம் வெளியாகும் என கூறியுள்ளார், விஜய் இவ்வாறு கூறியுள்ளது தமிழ் சினிமாவை காப்பாற்ற பட்டுள்ளதாகவும் சினிமா பிரபலங்கள் கூறுகிறார்கள்.

எது எப்படியோ தளபதி விஜயின் திரைப்படத்தை திரையரங்கில் கைதட்டி விசிலடித்து பார்த்தால்தான் மாஸாக இருக்கும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.