அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு கோலாகலமாக ரிலீஸ் ஆக உள்ளது இந்த படத்தின் ப்ரோமோஷன் பெரிய அளவு இல்லை என்றாலும் படத்தில் நடித்த பல பிரபலங்கள் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் துணிவு படத்தில் பேங்க் மேனேஜராக நடித்துள்ள ஜி எம் சுந்தரம் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
அஜித்துடன் துணிவு படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது முதலில் நான் அவரை வலிமை படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் தான் பார்த்தேன். எல்லோரிடமும் எளிமையாக பழகக்கூடியவர். துணிவு படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் அஜித் பைக் ரைடிங் குறித்து பல தகவல்களையும் மற்றும் புது தகவல்களையும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் துணிவு படத்தின் கதை போல் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த கதையும் வரவில்லை நிச்சயம் துணிவு திரைப்படம் வித்தியாசமாக அதே சமயம் ரசிகர்கள் கொண்டாடும்படி சூப்பராக இருக்கும் என கூறினார்.தொடர்ந்து சினிமா குறித்து பேசி வந்த அவரிடம் திடீரென யார் நம்பர் ஒன் என்பது குறித்து கேள்வி எழுப்பினர் அதற்கு அவர் பதில் அளித்தது..
அஜித், விஜய் இருவருமே பெரிய ஸ்டார் கிடையாது. ஆனால் நல்ல நடிகர்கள்.. விஜய் பெஸ்ட் டான்சர் என்றால் அஜித்திற்கு என ஒரு ஏரியா இருக்கு.. இருவரில் யார் பெஸ்ட் என சொல்ல முடியாது இது வருமே சமம் தான் இருவருமே நான் 100 மதிப்பெண் கொடுப்பேன் என கூறினார். கடைசியாக எந்த படத்தை முதலில் பார்ப்பீர்கள் என கேட்டதற்கு முதலில் நான் நடித்த துணிவு திரைப்படத்தை பார்ப்பேன் பின் வாரிசு படத்தை பார்ப்பேன் என கூறினார்.