ஒரு நிகழ்ச்சி சிறப்பாக இருந்தால் அதை அடுத்தடுத்த சீசனாக தொலைக்காட்சிகள் எடுத்து வருகின்றன அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சி பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை சீசன் சீசனாக வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 5வது கட்ட சீசன் தற்பொழுது சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
மற்ற சீசன் களை விட இந்த சீசனில் குழுவாக சேர்ந்து விளையாடாமல் தனித்தனியாக விளையாடுவதால் பார்ப்பதற்கு விறுவிறுப்பாக இருக்கிறது மேலும் அவ்வப்பொழுது சண்டை போட்டுக்கொள்வது மற்றும் சேர்ந்து கொள்வதும் இருப்பது ரசிகர்களுக்கு செம ட்ரீட் அமைகிறது. இந்த பிக்பாஸ் வீட்டில் மிக அமைதியாக மற்ற போட்டியாளர்களை நிலைமையை புரிந்து கொண்டு சரியாக பயணிப்பதால் ராஜு ஜெயமோகன் மக்கள் மத்தியில் தற்போது பிரபலமாக காணப்படுகிறார்.
மேலும் அதிக மக்கள் மன்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளார் இதனால் இவர் பைனல் லிஸ்ட் வருவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் ராஜு ஜெயமோகன் மற்றும் இமான் அண்ணாச்சியை மற்ற போட்டியாளர்கள் வச்சி செய்கின்றனர் அதிலும் நேற்று இவர்கள் இருவரையும் உட்கார வைத்து தலையில் தண்ணீரை ஊற்றி அசிங்கப்படுத்தினர்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து சின்ன பொண்ணு வெளியேறியது இப்படி இருக்க சமீபத்திய பேட்டி ஒன்றில் ராஜு குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார் சின்ன பொண்ணு அதில் அவர் கூற வருவது : ராஜீவ் நல்லவரா கெட்டவரா என கேள்வி எழுப்பினார் அதற்கு பதிலளித்த சின்ன பொண்ணு நானும் அவரிடம் இதே கேள்வியை கேட்டிருக்கிறேன் நீங்கள் இவ்வளவு நல்லவரா பொறுமையை இருக்கீங்களே.
உங்களுக்கு கோபம் வராதா எனக் கேட்டிருக்கிறேன் அதற்கு அவர் எனக்கும் கோபம் வரும் அப்ப நான் இப்படி இருக்க மாட்டேன் என்று அதிர வைத்தது போல் பதிலளித்தார். அப்போது எனக்கு புரிந்துவிட்டது அவரை சீண்டினால் அவரும் மற்றவர்களை சீண்டுவார் என்று அப்பொழுது புரிந்து கொண்டேன். அவரை தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் சீண்டி பார்க்கிறார்கள் இனி வருகின்ற நாட்களில் ராஜீவின் உண்மை முகம் எல்லோருக்கும் தெரிய போகிறது என சொன்னார்.