இப்ப சொல்லு யார் நம்பர் 1 வம்பிழுக்கும் ரசிகர்கள்.! வாரிசை ஓட ஓட விரட்டிய துணிவு…

thunivu-vs-varisu
thunivu-vs-varisu

எச் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து வம்சி இயக்கியுள்ள விஜய் நடிப்பில் உருவாக்கி உள்ள வாரிசு திரைப்படமும் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஜில்லா, வீரம் திரைப்படத்தின் மூலம் மோதி கொண்ட அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவரும் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு துணிவு மற்றும் வாரிசு படத்துடன் மூலம் மறுபடியும் மோதி கொண்டு உள்ளனர். ஏற்கனவே எலியும் பூனையாக அடித்துக் கொண்டு வரும் தல, தளபதி ரசிகர்கள் இப்ப மட்டும் சும்மா விடுவார்களா.

அதுமட்டுமில்லாமல் ரசிகர்களை உசுப்பேத்தும் வகையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜ் அவர்கள் விஜய் தான் நம்பர் ஒன் என்று கூறி ரசிகர்களை மேலும் உசுப்பேத்தி விட்டார். இதனால் தளபதி ரசிகர்கள் விஜய் தான் நம்பர் ஒன், விஜய் தான் நம்பர் ஒன் என்று இணையத்தில் தல ரசிகர்களிடம் வம்பு இழுத்து வந்தார்கள்.

இதுவரைக்கும் சும்மா இருந்த தல ரசிகர்கள் தற்போது இப்ப சொல்லு யார் நம்பர் ஒன் என்று என தளபதி ரசிகர்களை வம்பு இழுத்து வருகிறார்கள். அதாவது நேற்று வெளியான துணிவு மற்றும் வாரிசு படத்தில் முதல் நாள் வசூல் நிலவரம் தற்போது இணையத்தில் வெளியாகிய வைரல் ஆகி வருகிறது.

அதாவது வாரிசு படம் தமிழகத்தில் 21 கோடி பெற்றுள்ளதாகவும் துணிவு திரைப்படம் 25 கோடி வரை வசூலித்துள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது இதனால் தல ரசிகர்கள் இப்ப சொல்லு யார் நம்பர் ஒன் என்று என தளபதி ரசிகர்களை வம்பிழுக்க ஆரம்பித்து விட்டார்கள். இது இணையத்தில் பெரும் பூகம்பமாக வெடிக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தளபதி ரசிகர்கள் முதல் நாள்தானே கடைசி நாள் பார்ப்போம் யார் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்று என்பது போல அமைதி காத்து வருவதாக கூறப்படுகிறது.