பொதுவாக சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகருக்கு மோதலாக மற்றொரு நடிகர் இருப்பது வழக்கம்தான் அந்த வகையில் அந்த நடிகர்கள் சிறந்த நண்பர்களாக இருந்தாலும் சரி அவர்களுடைய ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைதளத்தில் அடித்துக் கொள்வது வழக்கம்தான்.
அந்த வகையில் ரஜினி- கமல், விஜய்-அஜித், தனுஷ்-சிம்பு என போட்டிக்கு போட்டியாக நடிகர்களை சொல்லிக் கொண்டே போகலாம் அந்த வகையில் இதில் ஏதேனும் ஒரு நடிகரை ஒரு பிரபலம் பிடித்து விட்டது என்று சொல்லிவிட்டால் போதும் உடனே மற்ற நடிகர்களின் ரசிகர்கள் சண்டைக்கு செல்வது வழக்கமாக போய்விடுகிறது.
ஆனால் இதில் ஒரு சிலர் தப்பித்து விடுகிறார்கள் ஆனால் ஒரு சிலரோ பேசத் தெரியாமல் சிக்கிக் கொள்வது வழக்கம்தான் பெரும்பாலும் பிரபல கதாநாயகிகள் இடம் பேட்டியில் கேள்விகள் கேட்க்கும் பொழுது அவர்களுக்கு பிடித்த நடிகர் யார் என்பதை கேட்பது வழக்கமான கேள்விதான்.
இந்த கேள்விக்கு ஒரு சில நடிகைகள் பின்விளவை யோசித்துப் பார்த்துவிட்டு எனக்கு அனைவரையும் பிடிக்கும் என்று சொல்வார்கள். மேலும் ஒரு சில நடிகைகள் தான் கடைசியாக நடித்த திரைப்படத்தின் ஹீரோவை சொல்வார்கள்.
அந்த வகையில் தெலுங்கில் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக நடித்த நடிகை டாக்ஸி வாலா பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் இவர் தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பிரபலமான நமது நடிகையிடம் instagram பக்கத்தில் ரசிகர்கள் ஏகத்துக்கு கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள் அப்பொழுது உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேள்விகள் கேட்கப்பட்டது மட்டும் இல்லாமல் உங்களுக்கு யார் மீது கிரஷ் என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நமது நடிகை எனக்கு தனுஷ் என்றால் மிகவும் பிடிக்கும் என்று கூறியது மட்டும் இல்லாமல் தொடர்ந்து சிம்புவை ஆரம்பத்தில் சில காரணங்களால் பிடித்தது என்று சமூக வலைதள பக்கத்தில் கூறியிருந்தார் இதனால் சிம்பு மற்றும் தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் ரகலையில் இறங்கி விட்டார்கள்.