நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸ் : நானும் , எனது ரசிகர்களுக்கும் எப்போதும் மறக்க முடியாது.? தமன்னா அதிரடி.

tamanna
tamanna

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தொட முடியாத உச்சத்தை பெற்றுள்ளார் அதற்கு காரணம் அந்ததந்த திரை உலகில் இருக்கும் டாப் ஜாம்பவான்களின் படங்களில் இவர் நடித்து உள்ளதால் தற்போது இவருக்கு திரையுலகில் ஏறுமுகமாகவே இருந்து வருவதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன இப்படி இருக்க தற்போது வெப் சீரிஸ் பக்கமும் தலைகாட்டி உள்ளதால் அம்மணிக்கு சொல்லமுடியாத வரவேற்பு எகிறி உள்ளதாம்.

தமிழ் சினிமாவில் சமீப காலமாக தலை காட்டாவிட்டாலும் இவருக்கான ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ள அதிரடியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் நவம்பர் ஸ்டோரி நடித்துள்ளது அந்த ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தது போல அமைந்துள்ளது சினிமா உலகில் பெரும்பாலும் கவர்ச்சி மற்றும் குடும்ப ரோல்களில் நடித்து வந்த தமன்னாவை ரசிகர்கள் பலரும் வித்தியாசமான ரோல்களில் நடிக்க வேண்டும் என சமீபகாலமாக கேட்டு வந்தனர்.

அதற்கு ஏற்றார்போல நவம்பர் ஸ்டோரி கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி நடித்துள்ள இவருக்கு தற்போது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் இப்படி இருக்க சமீபத்திய பேட்டி ஒன்றில் அளித்த தமன்னா தற்போது சினிமாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது திரைப்படங்களில் மீதான எதிர்பார்ப்பு மாறி சினிமா பற்றிய ரசிகர்களின் பார்வையும் இனிமேல் மாறும் இந்த மாற்றங்கள் காரணமாக நட்சத்திர அந்தஸ்தும் மாறத் தொடங்கி உள்ளது.

தனி நடிகருக்காக ரசிகர்கள் யாரும் படங்களை பார்க்க மாட்டார்கள் படத்தின் கதை வலுவாக உள்ளதா என்பதை வைத்தே படங்களை தற்போது ரசிகர்கள் பார்க்கின்றனர் அது எனக்கு பெருமை பத்து வருடங்களுக்கு முன்னாள் ஒரு நடிகருக்கு கிடைத்த ரசிகர்கள் கூட்டம் இன்றைய தலைமுறை அதை உடைத்து உள்ளது மேலும் இப்பொழுது ரசிகர்கள் படத்தை நன்கு புரிந்து கொண்டு ஆராய்ந்து படத்தைப் பார்க்கின்றனர்.

மேலும் நான் பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் கிரைம், திரில்லர் போன்ற படங்களில் நடித்தது இல்லை அது மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்து வந்த நிலையில் அந்த குறையை நவம்பர் ஸ்டோரி போக்கி  உள்ளது. ஆனால் இந்த கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு மிகப் பெரிய சவாலாகவும் இருந்தது என கூறினார். இதனால் எனது ரசிகர்கள்ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றும் கூறினார்.