பல படங்களை வைச்சி செய்த ப்ளூ சட்டை மாறனுக்கு வந்த சோதனையை பார்த்தீர்களா.?

blue-sattai-maran
blue-sattai-maran

பொதுவாகவே ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியானல் அந்த திரைப்படத்தை விமர்சிக்க பல விமர்சகர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் மூலம் படம் நல்லா இருக்கு நல்லா இல்லை என தெரிவிப்பார்கள் அந்த வகையில் எந்த திரைப்படம் வெளியானாலும் அந்த திரைப்படத்தை உடனுக்குடனே விமர்சிப்பவர் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்.

இவர் ஒரு திரைப்படத்தை முதன் முறையாக கதை,திரைக்கதை,வசனம் எழுதி இசையமைத்துள்ள திரைப்படம்தான் ஆன்ட்டி இண்டியன் இந்த திரைப்படத்தை இவர் இயக்குகிறார் என்று தெரிந்தபோது இவரது ரசிகர்கள் இந்த படத்தை பார்ப்பதற்கு மிக ஆவலுடன் இருந்தார்கள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். சமீபத்தில் இந்த திரைப்படத்தை சென்சார் குழுவினர் பார்த்துள்ளார்கள் இதில் வரும் ஆபாச வசனங்கள் மற்றும் வேறு சில கவர்ச்சி காட்சிகள் இருந்தால் அதை மாற்றச் சொல்வது சென்சார் குழுவின் வேலை.

அதேபோல் இந்த திரைப்படத்தை சென்சார் குழுவினர் பார்த்துவிட்டு முழுமையாக நிராகரித்து தடை செய்துவிட்டனர் அதன்பிறகு ரிவைசிங் கமிட்டி என்று தணிக்கைக்கு இந்த திரைப்படம் அனுப்பப்பட்டுள்ளது அதில் பிரபல இயக்குனர் நாகபரணா தலைமையில் 10 பேர் கொண்ட குழு இந்தத் திரைப்படத்தை பார்த்து உள்ளார்கள்.

இதை பார்த்த பின்பு இந்த திரைப்படம் மிகவும் சிறப்பாக இருக்கிறது என கூறி உள்ளார்கள் ஆனால் இதில் வரும் ஒரு சில காட்சிகளை நீக்க வேண்டும் என கூறியுள்ளார்கள் அதிலும் குறிப்பாக இதில் வரும் சில கட்சிகளின் பெயர் வசனங்கள் போன்றவற்றதை நீக்கினால் இந்த படத்திற்கு கண்டிப்பாக யு/ஏ சான்றிதழ் வாங்குகிறோம் என கூறியுள்ளார்கள்.

இந்த தகவலை அறிந்த படக்குழுவினர்கள் உற்சாகத்தில் இருந்தார்கள் இதனையடுத்து இந்த திரைப்படத்தில் அடிக்கடி கபாலி என்னும் வசனம் வருகிறதாம் அப்படிப்பட்ட வசனம் எதுவும் இருக்க கூடாது எனவும் ரிவைசிங் கமிட்டி சொல்லியது மட்டுமல்லாமல் படத்தின் தலைப்பு ஆன்ட்டி இண்டியன் என்னும் டைட்டிலை  சுத்தமாக மாற்ற வேண்டும் என கூறியுள்ளார்கலாம்.

மேலும் ஆன்ட்டி இண்டியன் படத்திற்கு 38 கட்டளைகளை மறு தணிக்கை குழுவினர்கள் தந்துள்ளார்கள் இத்தனை கட்டளைகளையும் செய்தால் அந்த திரைப்படம் சீராக நகரும் எனவும் தெரிவித்துள்ளார்கள் இந்நிலையில் ரிவைசிங் கமிட்டி அல்லது மேல் முறையீடு நாங்கள் செய்ய இருக்கிறோம்.

blue satai maran
blue satai maran

என படக்குழுவினர் கூறியதாக தகவல் கிடைத்தது மட்டுமல்லாமல் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் எனவும் மூன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆதம் பாவா ரசிகர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளாராம் இதைதொடர்ந்து இந்த திரைப்படத்தைப் பற்றி புதிதாக தகவல் வெளிவருமா என ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.