100 கோடி நஷ்ட ஈடு கேட்டு சன் தொலைக்காட்சிக்கு நோட்டீஸ்.? மெகா ஹிட் சீரியலால் வந்த பெரும் தலைவலி.!

sun-tv
sun-tv

சன் தொலைக்காட்சி தான் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது. அதற்கு காரணம் இவர்கள் புதிது புதிதாக சீரியலை ஒளிபரப்பி இல்லத்தரசிகளை தனது கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் அது மட்டுமில்லாமல் இல்லத்தரசிகளின் மனதை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

மேலும் கடந்த சில வாரங்களாகவே டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாவது இடத்தில் இருக்கும் விஜய் தொலைக்காட்சியை விட அதிக ரேட்டிங் பெற்று என்றும் முன்னிலையில் வகித்து வருகிறது சன் தொலைக்காட்சி. அந்தவகையில் சன் தொலைக்காட்சியில் மிகப்பெரிய ஹிட்டடித்த சீரியல்களில் 1 தெய்வமகள். இந்த சீரியலை காண இல்லத்தரசிகள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் ஏனென்றால் இந்த சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் வாணி போஜன்.

இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது அதனால் இல்லத்தரசிகளும் வாணி போஜன் நடிப்பிற்காகவே இந்த சீரியலை பார்த்து வந்தார்கள் இந்தநிலையில் தெய்வமகள் சீரியலின் கதையை அனுமதி இல்லாமல் பெங்காலி மொழியில் ரீமேக் செய்து ஒளிபரப்பி விட்டார்கள் சன் தொலைக்காட்சி அதனால் விகடன் நிறுவனம் நூறு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தெய்வமகள் சீரியலின் கதையை அப்படியே வைத்துக்கொண்டு கதாபாத்திரங்களின் பெயர்களை மட்டும் மாற்றி கொண்டு debi என்ற பெயரில் ரீமிக்ஸ் செய்து ஒளிபரப்பி வருகிறது சன் பங்களா இதனை விகடன் கண்டுபிடித்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் நோட்டீஸில் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விகடன் நிறுவனம் சார்பில் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைப்பார்த்த ரசிகர்கள் ஒருவேளை சீரியலுக்கு கதை கிடைக்கவில்லையோ அதனால்தான் சன் நிறுவனம் இப்படி செய்துள்ளது என சன் நிர்வணத்தை  கிண்டல் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.