மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய திரைப்படத்தை எடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது கமலஹாசனை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கி வருகிறார், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
மேலும்நரேன், செம்மண், வினோத், காளிதாஸ், ஜெயராம், காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கடந்த வாரம்தான் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது கிட்டத்தட்ட நூற்று பத்து நாட்களுக்கு பிறகு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கமலஹாசன் நடிக்கும் காட்சிகள் அதிகமாக இருந்ததால் படத்தை விரைவாக முடிப்பதற்காக பிக்பாஸில் இருந்து வெளியேறினார் கமலஹாசன்.
இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி எதிர்பார்த்துக்கொண்டு ரசிகர்கள் இருக்கிறார்கள். கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து எப்படி ஒரு படம் எடுத்துள்ளார் என்பதை பார்க்க ஆவலுடன் இருக்கிறார்கள். இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதன் அதிகாரபூர்வ தகவலும் வெளியாகியுள்ளது மே மாதம் விக்ரம் திரைப்படம் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ஜூன் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புக்காக கிளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. மேலும் இந்தத் திரைப்படத்தில் துப்பாக்கி காட்சிகள் நிறைய வரும் என ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார் அதேபோல் இந்த காட்சியில் துப்பாக்கிகள் அதிகமாக காட்டப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த திரைப்படத்தில் கண் பார்வை தெரியாது எனக் கூறப்பட்ட நிலையில் கமல் கார் ஓட்டுவது போல் காட்சி உள்ளது இதன் மூலம் அது பொய்யான தகவல் என உறுதியாகியுள்ளது. அதேபோல் கைதி திரைப்படத்தை போல இரவு நேர சண்டை காட்சிகள் அதிகமாக காட்டப்படுகிறது அதுமட்டுமில்லாமல் பிரியாணி அண்டா, லாரி சேஸிங் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. மேலும் விஜய் சேதுபதி நரைத்த முடியுடன் சிறிய வயதான கெட்டப்பில் இருக்கிறார்.
கமலஹாசன் நீண்டகாலமாக எந்த ஒரு திரைப்படத்தில் நடித்து வெளியாகமல் இருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் கமல் ரசிகர்களுக்கு விருந்தாக அமைய இருக்கிறது விரைவில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் அடுத்து யார் திரைப்படத்தை இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.