விஜய்க்கு ஹீரோ ரோல் தவிர எதுவும் செட்டாகாது – படத்தை பார்த்து சொன்ன பிரபலம்.!

vijay
vijay

சினிமா உலகில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் ஆனால் ஒரு சிலரயோ ஹீரோவாக நடித்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள் அப்படி தான் காலம்காலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் எம்ஜிஆர் ஹீரோவாக நடித்தால் மட்டுமே படம் நன்றாக ஓடும் அதோடு சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கும்.

ஆனால் கமல் எந்த கதாபாத்திரதில் நடித்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் படத்தை பார்த்து ரசிப்பார்கள். அஜித் ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வார்கள் ஆனால் விஜய்க்கு அப்படி கிடையாது விஜய் ஹீரோவாக நடித்தால் மட்டுமே ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கம்.

அவர் மற்றபடி வில்லன் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தால் ரசிகர்களும் மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இது குறித்து விலாவாரியாக பேசியுள்ளார் சினிமா பைனான்சியர் விநியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியன் கூறியது. விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் எனக்கு ரொம்ப பழக்கம்.

அப்போ விஜய் வளர்ந்து வரும் ஒரு ஹீரோ. அந்த சமயத்தில் விஜய்யின் பிரியமுடன் படம் உருவாகி இருந்தது அந்த படத்தின் பிரிவியூ ஷோவை நானும் பார்த்து இருந்தேன். படம் சிறப்பாக இருந்தது ஆனால் கடைசியில் விஜய் இறந்து விடுவது போல காட்டியிருப்பார்கள் அப்பொழுது நான் சொன்னேன் விஜய் எம்ஜிஆர் மாதிரி அவர் ஹீரோவாக நடித்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும்.

நெகட்டிவ் ரோல் அவருக்கு செட் ஆகாது என நான் சொன்னது போல படம் வெளிவந்து வெற்றி பெறவில்லை அதே போல அழகிய தமிழ் மகன் படத்திலும் அவர் வில்லனாக நடித்து இருப்பார் அந்த படமும் ஓடவில்லை விஜய் ஹீரோவாக நடித்தால் மட்டுமே மக்கள் மற்றும் ரசிகர்கள் பார்த்து கொண்டாடுவார்கள் என அப்போதே கணித்துள்ளார் திருப்பூர் சுப்பிரமணியம்.