தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும் வலம் வருபவர் தான் தல அஜித் ஆரம்பத்தில் காதல் அம்சம் கொண்ட திரை படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தாலும் தற்போது இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே ஆக்ஷன் திரைப்படங்கள் ஆக அமைந்து வருகிறது.
அந்த வகையில் இவர் சமீபத்தில் நடித்த நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் இந்த இரண்டு திரைப்படத்தினை இயக்குனர் வினோத் அவர்கள் தான் இயக்கியிருந்தார். மேலும் இந்த இரண்டு திரைப்படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
இந்நிலையில் தொடர் வெற்றியை தொடர்ந்து தற்போது அஜீத் தன்னுடைய 61வது திரைப்படத்தினை நடித்து வருகிறார் என்ற திரைப்படத்தையும் வினோத் இயக்குவது மட்டுமில்லாமல் போனிகபூர் அவர்கள் தான் தயாரித்த வருவதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் தல அஜித்திற்கு இரண்டு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது அதில் ஒன்று ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி வில்லன் கதாபாத்திரம் ஒன்றிலும் தல அஜித் நடிக்க உள்ளாராம் மேலும் இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் தன்னுடைய உடல் எடையை சுமார் 25 கிலோ குறைத்து உள்ளதாக சமூக வலைதளப் பக்கத்தில் அப்டேட்டுகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி ஹைதராபாத்தில் நடைபெற்று வருவதாக தெரிய வந்துள்ளது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கான செட் அமைப்பதற்கு பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
போகிற போக்கை பார்த்தால் வலிமை திரைப்படத்தை விட இந்த திரைப்படம் மிகவும் சிறப்பாக வரும் எனவும் மாபெரும் பெற்றுக்கொடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.ஏனெனில் பொதுவாக தல அஜித் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்கும் போது திரைப்படம் ஹிட் அடிப்பது வழக்கம் தான் அந்த வகையில் பில்லா போன்ற திரைப்படங்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.