இப்ப இல்ல.. அப்பவே அஜித் தான் நம்பர் 1 – அடித்து சொன்ன விஜய் பட தயாரிப்பாளர்.!

ajith
ajith

சினிமா உலகில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு இருக்கும் ஒரே ஒரு ஆசை என்னவென்றால் தான் உச்ச நட்சத்திரமாக இருக்க வேண்டும் என்பது தான். அதை அடைய நடிகர் நடிகைகள் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து கடினமாக உழைக்கின்றனர்.

சினிமாவுலகில் ஓட்டு போட்டு கொண்டு வந்தாலும் நிஜ உலகில் அதற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கின்றனராம் நல்ல நண்பர்களாக  குடும்பத்தை நல்லபடியாக பார்க்கின்றனர் அந்த வகையில் அஜித் விஜய்யை அடிச்சிக்க ஆளே இல்லை சினிமாவை தாண்டி தனது குடும்பத்தை சிறப்பாக பார்த்து வருகின்றனர்.

ஆனால் சினிமா என்று வந்துவிட்டால் நல்ல நாட்களில் படங்களின் மூலம் மோதிக்கொள்வது வழக்கம் அந்த வகையில் இருவரும் தொடர்ந்து படங்களில் மூலம் மோதிக்கொண்டு யார் வெற்றிபெறுவார்கள் என்பதை வைத்திருக்கின்றனர். இப்படியிருந்தாலும் 1997 ஆம் ஆண்டு ராஜாவின் பார்வையிலே படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது அதன் பின் இருவரும் சேர்ந்து நடிக்காமல் தனித்தனியாக படங்களில் நடித்து வருகின்றனர்.

அப்படி ஒரு தடவை 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான தீனா, விஜய் நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் ஆகிய படங்கள் ஒரே தேதியில் மோதியது. தீனா திரைப்படம் முழுக்க முழுக்க காதல் மற்றும் சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்த திரைப்படமாக இருந்ததால் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்து இழுத்தது.

விஜய், சூர்யா இணைந்து நடித்த பிரண்ட்ஸ் திரைப்படம் காதல் மற்றும் காமெடியை மையமாக வைத்து இருந்தது இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றாலும் திரைப்படம் தமிழகத்தில் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய அதிக வசூல் சாதனை செய்தது  அஜித்தின் தீனா. ஆனால் விஜய் நடித்த பிரண்ட்ஸ் திரைப்படம் அதை செய்ய தவறியதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் அப்பச்சன் அதனை தெரிவித்துள்ளார்.