ரெண்டு மூணு நிமிஷம் கூட கிடையாது.? ஒரு விளம்பர படத்துக்கு மட்டுமே பல கோடி வாங்கும் மகேஷ்பாபு

mahesh babu
mahesh babu

சினிமாவுலகில் திறமை இருப்பவர்கள் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றிய ஒரு கட்டத்தில் தொடர் வெற்றிகளைக் கண்டு சினிமா உலகில் தவிர்க்க முடியாத நபராக மாறி விடுகின்றனர். அவர்களில் ஒருவராக இருப்பவர் மகேஷ் பாபு. தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு.

அவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து உள்ளன. காரணம் சிறப்பான கதை காலத்திற்கு ஏற்றவாறு தனது திறமையை வெளிக் காட்டி அசத்தி வருகிறார். இப்பொழுது கூட இவர் நடிகை நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து sarkaru vaari paata என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இவர்களுடன் இணைந்து பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடித்து அசத்தி உள்ளனர்.

இந்த படத்தில் வெளியான அனைத்து அப்டேட்டுகளும் சிறப்பாக இருந்ததால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் மகேஷ்பாபு படங்களில் நடிப்பதையும் தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து தலைகாட்டி வருகிறார்.

அப்படி இப்பொழுதுகூட நடிகர் மகேஷ்பாபு விளம்பர படமொன்றில் நடித்துள்ளாராம் குளிர்பான விளம்பரத்தில் நடித்துள்ள மகேஷ்பாபு வாங்கியுள்ள சம்பளத்தை கேட்டால்தான் அதிர்ச்சியளிக்கிறது ஆம் சும்மா ரெண்டு மூணு நிமிஷம் வந்து போனதற்கு மட்டுமே சுமார் 12 கோடி அந்த விளம்பரத்திற்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தில் நடிப்பதை விட விளம்பரப் படங்களில் அதிக காசுகளை நடிகர்கள் வாங்கி அசத்துகின்றனர்  மற்ற நடிகர்களை போல சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவும் அள்ளுகிறார் குறிப்பிடத்தக்கது.