தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக தேசிய விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யா அவர்கள் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இதில் இயக்குனர் பாலாவுடன் இணைந்து நீண்ட ஆண்டுகள் கழித்து மீண்டும் வணங்கான் என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளனர். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் பாலாவிற்கும் சூர்யாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டு இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து சூர்யா அவர்கள் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்த நேரத்தில் சிறுத்தை சிவா இயக்கம் சூர்யா 42 திரைப்படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படத்தில் இருந்து ஒரு போஸ்டர் வெளியாகி உள்ளது அது மட்டும் அல்லாமல் சூர்யா 42 திரைப்படம் பத்து மொழிகளில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது அது மட்டும் அல்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா அரத்தர், பெண்காட்டார், முக்கட்டார் பெருங்களத்தார் என ஐந்து வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பதை தற்போது வெளியாகி உள்ளது சூரியன் 42 படத்தின் போஸ்டர் மூலம் தெரிய வந்திருக்கிறது.
மேலும் இது பேண்டஸி கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் 3d முறையில் உருவாகும் ஒரு சரித்திர படம் எனவும் ஆயிரம் வருடங்களுக்கு முன் நடந்த கதையையும் தற்போதைய காலத்திற்கு ஏற்றார் போல் இருக்கும் கதைகளையும் வைத்து இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.