ஒரு மாசம் கூட முடியல.. அதுக்குள்ள OTT தளத்திற்கு வரவிருக்கும் “பீஸ்ட்” – எந்த தேதியில் தெரியுமா.?

beast
beast

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான பீஸ்ட திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி உலக அளவில் ரிலீஸானது தமிழை தாண்டி கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் படம் ரிலீஸ் ஆனது.

ஆனால் படம் வெளிவந்து ரசிகர்களை சற்று கவலை அடைய செய்து விட்டது காரணம் விஜயின் முந்தைய படங்களை காட்டிலும் இந்தப் படமம் அந்த அளவிற்கு சிறப்பாக இல்லாமல் போனது குறிப்பாக மாஸ் சீன்கள், காமெடி சரியாக ஒர்க்அவுட் ஆகவில்லை.

இருப்பினும் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் எப்போதும் விஜய் திரைப்படத்தைப் பார்ப்பது உண்டு கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் வேட்டையை அடித்து நொறுக்குகிறது இதுவரை 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. .

பீஸ்ட் படத்தை எதிர்த்து கேஜிஎப் திரைப்படம் நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருந்தாலும் விஜயின் பீஸ்ட் படத்திற்கான வரவேற்பு குறையாமல் இருப்பதால் வருகின்ற நாட்களில் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் பீஸ்ட் திரைப்படமும் ஒரு மாதத்திற்குள்ளேயே OTT தளத்தில் படம் ரிலீஸ் செய்ய இருக்கிறது.

பீஸ்ட் படம் OTT ல் வருகின்ற மே 11ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது அதுவும் 2 OTT தளத்தில் ரிலீசாகின்றன ஒன்று நெட்பிளிக்ஸ்  மற்றொன்று சன் நெக்ஸ்ட் ஆகிய அவற்றில் இந்த படம் ரிலீசாக இருக்கிறது OTT தளத்திலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற அசத்தும் என்பது படக்குழுவின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.