10 வயதுகூட ஆகவில்லை ஆனால் ஒரு காட்சிக்காக புலியின் மீது என்னை சவாரி செய்ய சொன்னாங்க என கூறிய பிரபல நடிகை.! அதுவும் எந்த திரைபடத்தில் தெரியுமா.!

kutty-pathmini

குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து சரித்திரம் படைத்த ஏராளமான நடிகைகள் இருக்கின்றார்கள். அதிலும் முக்கியமாக அந்த காலத்தில் இருந்த நடிகைகள் தற்பொழுது உள்ள நடிகைகளை விட உன் திறமை வாய்ந்த நடிகைகளாக திகழ்ந்துள்ளனர்.

அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான பிரபல நடிகை ஒருவர் தனது குழந்தை பருவத்திலேயே புலி மீது சவாரி செய்த புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது குழந்தை நட்சத்திரமாக 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தியவர் தான் குட்டிபத்மினி.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஏராளமான நடிகைகள் தற்பொழுது வெள்ளித்திரையில் நடித்து வந்தாலும் இவர்களுக்கும் முன்னோடியாக திகழ்கிறார் குட்டி பத்மினி. அந்தவகையில் இவர் ஏவிஎம்மின் குழந்தையும் தெய்வமும் படத்தில் இரண்டு வேடங்களில் சிறப்பாக நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசிய விருதை பெற்றார்.

இப்படிப்பட்ட நிலையில் இவர் 1966ஆம் ஆண்டு மார்ச் 3ம் தேதி தெலுங்கில் சகுந்தலா என்ற புராண திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் துஷ்யந்த்,சகுந்தலா போன்ற புகழ் பெற்ற கதையை திரைப்படமாக எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் துஷ்யந்தனாக என்.டி.ஆரும், சகுந்தலையாக சரோஜினி தேதியும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தில் துஷ்யந்தன்- சகுந்தலை பிறந்த ஆண் குழந்தையாக நடிக்க ஒரு சிறுவன் தேவை பட்டுள்ளார் அந்நாட்களில் குழந்தை நட்சத்திரமாக தமிழில் பிரபலமாக இருந்த சிறுமிக்கு ஆண் வேடமிட்டு நடிக்க வைத்துள்ளனர். அந்த குழந்தைதான் குட்டிபத்மினி. அவரை பேபி பத்மினி என அனைவரும் அழைப்பர்.

kutty-pathmini
kutty-pathmini

இந்த திரைப்படத்தின் காட்சி ஒன்றில் புலிக்கொடியுடன் குழந்தை பரதன் புலியின் மீது சவாரி செய்ய வேண்டும். அப்பொழுது குட்டி பத்மினிக்கு 10 வயது நிரம்பவில்லை. அப்பொழுது குட்டி பத்மினிக்கு நிறைய சாக்லேட்டை கொடுத்து புலி மீது சவாரி செய்ய கூறி உள்ளார்கள் படக்குழுவினர்கள்.