NON – VEG தொடாமல் இருக்கும் நடிகர், நடிகைகள் – சாம்பார் சாதத்தை சாப்பிட்டு வாழும் பிரபல நடிகர்

Madhavan
Madhavan

திரையுலகில் இருக்கும் நடிகர், நடிகைகள் பலரும் தனது உடம்பை அழகவும், பிட்டாகவும் வைத்துக் கொள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுகின்றனர். அப்படி சில நடிகர் நடிகைகள் அசைவ உணவை தொடுவதில்லை அவர்களைப் பற்றி விலாவாரியாக பார்ப்போம்..

1. மாதவன் : ஆள் பார்ப்பதற்கு கட்டுமஸ்தானாக இருந்தாலும் இவர் அசைவ உணவுகளை விரும்பியதே கிடையாது இவர் அதிகம்  சைவ உணவுகளையே சாப்பிடுவார் வீட்டில் வைக்கும் சாம்பார் சாதம், உருளைக்கிழங்கு அவருக்கு ரொம்பவும் பிடித்த ஒன்று.

தமன்னா : தென்னிந்திய சினிமா உலகில் பிரபல நடிகையாக வரும் தமன்னா அண்மையில் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு செம்ம குத்து குத்தி பலரது மனதையும் கவர்ந்து உள்ளார் இவர் ஆரம்பத்தில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என அதிகமாக சாபிட்டாலும்..  கடந்த சில ஆண்டுகளாக சுத்தமாக தவிர்த்து சைவ உணவுக்கு மாறி உள்ளார்.

திரிஷா  : 24 ஆண்டுகளாக திரையுலகில் ஜொலித்து வரும் இவர் சைவ விரும்பி இவர் அதிகமாக சாலடுகளை அதிகம் விரும்பி சாப்பிடக்கூடியவர் மேலும் பிடித்த உணவு தோசை, சாம்பார் சாதம்.

ஸ்ரேயா சரண்  : தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்த பெரிய அளவில் பிரபலம் அடைந்த இவர் தன்ன இளமையாகவும் வைத்துக் கொள்ள அவர் சைவ உணவுகளை அதிகம் உட்கொண்டு வருகிறார். சைவ உணவு எதுவாக இருந்தாலும் விரும்பி சாப்பிடக்கூடியவர்.

சூர்யா  : தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வரும் இவர் எப்பொழுதுமே உடம்பை செம்ம அழகாக மெயிண்டன் செய்யக்கூடியவர்.  அவரைப் பார்த்தால் அசைவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வார் என்பது போல தெரியும் ஆனால் உண்மையில் அவர் ஒரு சைவ விரும்பி முட்டை கூட சாப்பிட மாட்டார் என கூறப்படுகிறது மட்டன் சிக்கன் போன்றவற்றை பெரிதும் விரும்பாத சூர்யா. அதிகம் தயிர் சாதத்தை தான் விரும்பி சாப்பிடுவாராம்.