Ajith : அஜித் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்து வெற்றி இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் “விடாமுயற்சி” படத்தில் நடிக்கயுள்ளதாக செய்திகள் வெளியானாலும் அதன் பிறகு எப்பொழுது சூட்டிங் என்பது குறித்து எந்த ஒரு அப்டேட்டுமே வெளிவராமல் இருந்து வருகிறது.
ஆனால் விடாமுயற்சி படத்தில் அந்த நடிகர்கள் நடிகிறார்கள், இந்த நடிகைகள் நடிகிறார்கள் என்ற பேச்சுகள் மட்டும் குறைந்தபாடு இல்லை அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என முதலில் பேசப்பட்டது அதன் பிறகு ஹிந்தி ஹீரோயின்கள் என சொல்லப்பட்ட நிலையில் கடைசியாக விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடி த்ரிஷா என உறுதியாக சொல்லப்பட்டது.
ஆனால் லியோ படத்தை தொடர்ந்து திரிஷாவுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிகிறதாம். இதனை உணர்ந்த அஜித் இயக்குனரிடம் திரிஷாவுக்காக காத்திருக்க வேண்டாம் ஏனென்றால் ஏற்கனவே நாம் லேட் இனியும் காத்திருந்தால் படம் ரொம்பவும் தாமதம்..
ஆகிக்கொண்டே போகும் எனக்கூறி த்ரிஷாவுக்கு பதிலாக தமன்னாவை போடுங்கள் என கண்டிஷன் போட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. திடீரென தமன்னா பக்கம் படக்குழு திரும்ப காரணம் ஜெயிலர் படத்தில் தமன்னா காவலா பாடலுக்கு போட்ட குத்தாட்டம் பெரிய அளவில் டிரெண்டாகியதால்..
தற்பொழுது பீக்கில் இருக்கும் தமன்னாவை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என படக்குழு திட்டம் போட்டு இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. விஷயத்தை கேள்விப்பட்ட பலரும் இதுவும் ஒரு செம பிளான் தான் எனக் கூறி இந்த செய்தியை பெரிய அளவில் பரப்பி வருகின்றனர்.