விஜயுடன் சேர்வதில் பிரச்சனையில்லை.. இது நடந்தா கண்டிப்பா நடிப்பேன் – சாய் பல்லவி வெளிப்படையான பேச்சு.!

sai-pallavi
sai-pallavi

நடிகை சாய் பல்லவி தெலுங்கு மலையாளம் படங்களின் மூலம் அறிமுகமாகி பிரபலமடைந்தவர். அதிலும் குறிப்பாக மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து பட்டித்தொட்டி பிரபலமடைந்தார்.

இந்தப் படத்திற்காக ஃபிலிம் பேர் விருது வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கிலும் முக்கிய கதை அம்சமுள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டு அங்கு முன்னணி நடிகையாக வளம் வருகிறார். பின்பு தமிழிலும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி 2 படத்தின் மூலம் அறிமுகம் ஆகி கால்தடம் பதித்தார்.

இந்த படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான என்ஜிகே படத்திலும் நடித்திருந்தார். இப்படி தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் சிறந்த படங்களை தேர்வு செய்து நடித்து வெற்றி கண்டு வருகிறார். மேலும் சாய் பல்லவிக்கு திரும்பும் இடமெல்லாம் வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

அப்படி தற்போதும் பல மொழி படங்களில் கமிட்டாக பிசியாக நடித்த வருகின்ற சாய்பல்லவி தமிழில் சிவகார்த்திகேயன் அடுத்த நடிக்க உள்ள ஒரு புதிய படத்திலும் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார்  இந்த படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து தமிழில் டாப் நடிகர்களின் படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் தற்போது சாய்பல்லவி..

நடித்து வரும் கார்கி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் அப்போது அவரிடம் தளபதி விஜய் உடன் எப்போது சேர்ந்து நடிப்பீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சாய் பல்லவி நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன் எனக் கூறியுள்ளார். இதை கேட்ட விஜய் ரசிகர்கள் இருவரையும் ஒன்றாக பார்க்க மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.