தடுக்கி விழுந்தால் நம்மை யாரும் தூக்கி விட மாட்டார்கள்.! திடீரென செல்வராகவன் போட்ட பதிவு..

selvaraghavan
selvaraghavan

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் செல்வராகவன். இவர் தமிழில் பல திரைப்படங்களை இயக்கி தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் அதிலும் குறிப்பாக இவர் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியானபோது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும்.

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரீ ரிலீஸில் பட்டைய கிளப்பியது அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவன் இரண்டாவது பாகம் எப்போது உருவாகும் என பல கேள்விகள் எழுந்து வருகிறது இதனை தொடர்ந்து செல்வராகவன் அவர்கள் தனது சகோதரரான தனுஷ் அவர்களை வைத்து கிட்டதட்ட மூன்று நான்கு படங்களை இயக்கியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட தகவல். இந்த நிலையில் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் கடந்த மாதம் வெளியான நானே வருவேன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன் படங்களை இயக்குவதிலும் பிஸியாக இருந்து வருகிறார் அதேபோல திரைப்படங்களில் நடிக்கவும் ஆரம்பித்து விட்டார். அப்படி செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த படம் சாணி காகிதம் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

மேலும் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் இயக்குனர் செல்வராகவன். இத்தனை நாட்களாக இயக்குனராக கலக்கிக் கொண்டிருந்த செல்வராகவன் நடிகராகவும் நடித்து வருகிறார் இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அந்த பதிவு ரசிகர்களை ஆச்சரிய பட வைத்திருக்கிறது.

அதாவது ” இங்கு தடுக்கி விழுந்தால் யாருமே நம்மை தூக்கி விட மாட்டார்கள் நாம தான் எப்படியாவது எழுந்து நின்று நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக் கொள்ள வேண்டும். அப்படி யாரையாவது நம்பி கீழே விழுந்தால் வாழ்க்கை முழுமையாக விழுந்து கிடக்கும் என்று செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த பதிவை பதிவிட்டு உள்ளார். இப்படி இவருடைய இந்த பதிவை பார்த்து பல ரசிகர்கள் அதிர்ந்து போய் உள்ளார்கள்.