தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ் இவர் சினிமா உலகில் பன்முக தன்மை கொண்டவராக விளங்குகிறார். இவர் நடிகர் என்று அந்தஸ்தையும் தாண்டி டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் என பல திறமை வளர்த்துக் கொண்டது ஓடுகிறார்.
இப்பொழுது தொடர்ந்து பல்வேறு புதிய படங்களில் நடிக்கிறார் அந்த வகையில் சந்திரமுகி 2, ருத்ரா, அதிகாரம், துர்கா ஆகிய படங்கள் கைவசம் வைத்திருக்கிறன. இதில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுவது சந்திரமுகி 2 படம் தான் ஏனென்றால் சந்திரமுகி முதல் பாகம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரமுகி இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை பி. வாசு இயக்குகிறார் வடிவேலு, ராதிகா சரத்குமார், லட்சுமி மேனன் மற்றும் பலர் இணைந்து இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்காக ராகவா லாரன்ஸ் உடல் எடையை ஏற்றி தற்போது புதிய லுக்கில் நடித்து வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் ராகவா லாரன்ஸ் தகவல்களை சொல்லி உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது. இத்தனை ஆண்டுகளாக என் அறக்கட்டளைக்கு ஆதரவளித்த அனைத்து நன்கொடையாளர்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன் நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்து உங்கள் நன்கொடைகளால் என் சேவைக்கு ஆதரவு கொடுத்தீர்கள் எனக்கு தேவைப்படும்போது எல்லாம் உங்கள் உதவியை பெற்று என்னால் முடிந்த உதவிகளை அறக்கட்டளை மூலம் செய்து உள்ளேன்.
இப்போ நான் நல்ல இடத்தில் இருக்கிறேன் மேலும் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்த வருகிறேன் எனவே மக்களுக்கு சேவை செய்யும் முழு பொறுப்பையும் நானே ஏற்கென முடிவு செய்துள்ளேன் இதனால் இனி என் அறக்கட்டளைக்கு யாரும் உங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம் மாறாக உங்கள் ஆசீர்வாதம் எனக்கு போதும் இத்தனை ஆண்டுகளாக எனக்கு கிடைத்த ஆதரவுக்கும், அன்புக்கும் நான் நன்றி உள்ளவனாக இருப்பேன் எனக் கூறி உள்ளார்.