தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து அசத்தி வருகிறார் குறிப்பாக இவர் தமிழில் எடுத்த உடனேயே உச்ச நட்சத்திர நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்ததால் அவரது மார்க்கெட் தமிழில் எகிறியது.
இதுவரை நடிகை தமன்னா தமிழில் அஜித்,விஜய், சூர்யா, தனுஷ் போன்ற டாப் ஹீரோகளுடன் ஜோடி போட்டு நடித்து அசத்தி உள்ளார். இப்படி சூப்பராக ஓடிக் கொண்டிருந்த தமன்னாவுக்கு கடந்த சில காலமாக சொல்லு கொள்ளும்படி பட வாய்ப்புகள் தமிழில் கிடைக்காமல் இருந்தார். அதற்காக அவர் வருத்தப்படவில்லை.
மற்ற மொழிகளில் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றி ஓடினார் மேலும் ரசிகர்களை வளைத்து போடும் வகையில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி ஓடிக் கொண்டிருந்த இவருக்கு தமிழில் நீண்ட வருடம் கழித்து இப்பொழுதுதான் வாய்ப்பு கிடைத்துள்ளது அதுவும் எடுத்தவுடனேயே
ரஜினியின் 169 திரைப்படமான ஜெயிலர் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன இந்த நிலையில் நடிகை தமன்னா சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதில் அவர் சொன்னது சினிமாவில் பெண்களுக்கு கொஞ்சம் கூட மதிப்பில்லை பெண்கள் பேச்சை மதிக்க மாட்டார்கள் ஏன் ஹீரோக்களுக்கு வழங்கும் சம்பளத்தில் பாதியை கூட ஹீரோயின்களுக்கு தருவதில்லை போஸ்டரில் ஹீரோயின்கள் முகம் வருவதே பெரிய விஷயமாக இருக்கு..
ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு ஹீரோ வரவில்லை என்றால் அதை ஒரு மாதிரியாகவும் ஹீரோயின் வரவில்லை என்றால் அதை ஒரு மாதிரியாகவும் விமர்சனம் செய்கின்றனர் இந்த நிலை எப்பொழுது மாறும் என தெரியவில்லை என நடிகை தமன்னா அதிரடியாக பேசினார். இச்செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது