தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் ஒரு முன்னணி வில்லனாக வலம் வந்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வில்லத்தனமான கதாபாத்திரத்தின் மூலம் மெய்சிலிர்க்க வைத்துள்ளவர் நடிகர் ஆனந்த ராஜ். இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், பார்த்திபன், விஜய், அஜித், என பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு சிறிது காலம் ஓய்வில் இருந்த நடிகர் ஆனந்தராஜ் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை வில்லனாக ரீ என்ட்ரி கொடுத்தார். மேலும் சமீபத்தில் கூட விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படத்தில் துணை நடிகராக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்..
ஆரம்பத்தில் வில்லனாக நடித்து நம் அனைவரையும் மிரட்டிய ஆனந்தராஜ் தற்போது நகைச்சுவை வில்லன், குணச்சித்திர வேடம், அப்பா, போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் ஆனந்தராஜ் அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய அவர் மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை என்று தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல் டீ காபி உள்ளிட்ட எந்த ஒரு பொருளையும் நான் அருந்த மாட்டேன் என்றும் இதனால் தான் நான் சர்ச்சையில் சிக்க விலை என்றும் பிரபல வில்லன் நடிகர் ஆனந்தராஜ் அவர்கள் தெரிவித்திருந்தார். அப்படி கூறிய ஆனந்த் ராஜ் அண்மையில் நடிகர் ஆனந்தராஜ் இடம் கேட்கும் போது நீங்கள் ஒரு டீ டோட்டலரா என்று கேட்டார் அப்போது. சினிமாவைப் பொறுத்தவரை டீ டோட்டலராக இருந்தால் மதிக்க மாட்டார்கள்.
மேலும் மது அருந்துவது புகைப்பிடிப்பது இதெல்லாம் உடலுக்கு வேண்டுமானால் குறையாக இருக்கலாம். ஆனால் சினிமாவில் யாரும் மதிக்க மாட்டார்கள் என்று தற்போது தெரிவித்துள்ளார் அதனால் இவர் ஒரு டி டோட்டலர் கிடையாது என்று கூரியர் வருகின்றனர்.