அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கும் கிடையாது.? கோபத்தில் ரஜினி எடுத்த முடிவு

rajini
rajini

திரை உலகில் ஜொலிக்கும் ஒவ்வொரு நடிகருக்கும் இருக்கும் ஆசை நம்பரும் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான். அதை விட்டு விட்டு வேறு ஒருவருடைய  பட்டத்தை பிடுங்குவது அவ்வளவு அழகாக இருக்காது ஆனால் அதை உணராத ஒரு சில நடிகர்கள் போட்டி போடுகின்றனர்..

அந்த வகையில் அடுத்த உலக நாயகன் யார்.? அடுத்த சூப்பர் ஸ்டார் யார்.? என பலரும் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்புகின்றனர் அதற்கு ஏற்றது போல நடிகர்களும் போட்டி போடுகின்றனர். இந்த நிலையில் பிரபல youtube சேனல் ஒன்று விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்  என்று சொல்லி பெரும் பரபரப்பை கிளப்பியது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பட்டத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதற்காக வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார். ஆனால் தன்னைப் பார்த்து வளர்ந்த சில பையன் தனது பட்டத்திற்கு ஆசைப்படுவது நல்ல விஷயமாக இருந்தாலும் தனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க தவறிவிட்டாரோ என ரஜினிக்கு தோன்றி உள்ளதாம்..

ரஜினி பெரிதாக பட்டத்திற்கு அல்லது எந்த ஒரு விருதுக்கும் ஆசைப்பட்டவர் கிடையாது ஆனால் ரசிகர்கள் பார்த்துக் கொடுத்த சூப்பர் ஸ்டார் படத்தை ரஜினி பெரியதாக நினைத்து உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறார்  அப்படிப்பட்ட பட்டத்தை  இன்னொருவர் பிடுங்க நினைப்பது  ரஜினிக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.

எந்த பாக்ஸ் ஆபிஸை வைத்து விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுகிறார் என தெரியவில்லை ஆனால் அதைவிட மிகப்பெரிய ஒரு பாக்ஸ் ஆபிஸை கொடுக்க தற்போது ரஜினி முடிவு எடுத்து இருக்கிறாராம். இதனால் நம்பர் ஒன் பட்டத்தை ரஜினி இடமிருந்து யாராலும் பிடுங்க முடியாது என தெரிய வருகிறது.