இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு திடீர் மாற்றங்கள் நடக்கின்றன அந்த வகையில் ஒருநாள் அணியின் கேப்டனாக இதுவரை இருந்து வந்த விராட் கோலியின் பதவியை பிடிங்கி ரோஹித் சர்மாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது அதாவது கடந்த 7 வருடங்களாக கேப்டனாக சிறப்பாக இந்திய அணியை வழிநடத்தி வந்த இவர் கடந்த 20 ஓவர் உலக கோப்பை தொடருக்கு பிறகு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதன் பின் தற்போது ஒருநாள் கேப்டன் பதவியையும் அவரிடம் இருந்து பிடுங்கி உள்ளது.
இந்த நிலையில் 20 ஓவர் கிரிக்கெட் பார்மாட்டுக்கு ரோகித் சர்மாவை புதிய கேப்டனாக அண்மையில் நிர்ணயித்து ரோகித் சர்மாவும் இளம் வீரர்களை வைத்து நியூசிலாந்து அணியை 3 – 0 என்ற கணக்கில் வெற்றியை ருசித்து அசத்தினார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கோலி வழக்கம்போல கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
திடீரென பிசிசிஐ விராட் கோலி உடனடியாக கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டுமென கேட்டுக் கொண்டது ஆனால் வீராட் கோலியும் பொறுப்பில் இருந்து விலக இதையடுத்து அந்த பொறுப்பை அவரிடம் பறித்து ரோஹித்துக்கு கொடுத்து ஒருநாள் மற்றும் 20 ஓவர் பார்மட்டில் ரோஹித் முழு நேர கேப்டனாக செயல்பட வேண்டும் என கூறியது இது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
கிரிக்கெட்டில் தற்போது கிங்காக வலம் வரும் கோலியிடம் இருந்து கேப்டன் பொறுப்பை பறித்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது ஏன் அவரிடமிருந்து பொறுப்பை பறித்தது என்பது குறித்த தற்பொழுது பதிலும் கிடைத்துள்ளது அதன்படி பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பேசி வருகின்றனர் இந்த நிலையில் பிசிசிஐயின் தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலி இது குறித்து பேசியுள்ளார் அதில் அவர் கூறியது.
20 ஓவர் கிரிக்கெட் பார்மட்டில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டாம் என விராட் கோலியிடம் பிசிசிஐ சார்பில் கேட்டுக் கொண்டோம். மேலும் கேப்டனை மாற்றும் ஐடியா கிடையாது ஆனால் விராட் கோலி 20 ஓவர் கேப்டன்ஷிப் பொறுப்பிலிருந்து விலகினார் 20 ஓவர் அணியை ஒரு கேப்டனும், ஒருநாள் ஆணையை ஒரு கேப்டனும் வழிநடத்துவது தேர்வாளர்களுக்கு விருப்பம் இல்லை எனவே ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் கேப்டன்ஷிப் ரோஹித் சர்மாவிடம் கொடுத்து விட்டோம் என தெரிவித்தார்.