கமல் செய்த சாதனையை இன்று வரையிலும் யாராலும் செய்ய முடியவில்லை.! அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா.?

kamal
kamal

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தனது சிறு வயதில் இருந்த சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டார் அதன் பிறகு பல தடைகளை தாண்டி தற்போது உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். அதனை  தொடர்ந்து தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்கள் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்த திரைப்படம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் திரைப்படமான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை செய்தது அதுமட்டுமல்லாமல் கமல்ஹாசன் அவர்களின் சினிமா வாழ்க்கையில் அதிக வசூல் செய்த முதல் திரைப்படம் விக்ரம் திரைப்படமாக அமைந்துள்ளது.

மேலும் விக்ரம் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகப்படுகிறது முதல் பாகம் சமீபத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் எனது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். இந்த நிலையில் கிடப்பில் போடப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் மாதத்திற்கு 10 நாட்கள் மட்டும் கால்ஷிட் கொடுத்துள்ளார்.

மேலும் நடிகர் கமல்ஹாசன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிதழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த மாதம் ஒன்பதாம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் 80களில் செய்த ஒரு சாதனை தற்போது உள்ள எந்த ஒரு நடிகராலும் செய்ய முடியவில்லை. அப்படி என்ன செய்திருப்பார் என்றால் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான  அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டுமல்லாமல் அந்த ஆண்டு கிட்டத்தட்ட நான்கு மொழிகளில் இவருடைய படங்கள் வெளியானது நான்கு மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது இதனால் இவரை உலக நாயகன் என அனைவரும் அழைத்தார்கள்.

ஒரு ஆண்டில் நான்கு மொழிகளிலும் சுத்தி வந்த நடிகர் கமல்ஹாசன் செய்த அந்த சாதனையை தற்போது எந்த ஒரு நடிகரும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.