சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி கலக்கி கொண்டிருக்கும் திரைப்படம்தான் மாநாடு. இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு அவர்கள்தான் இயக்கியிருந்தார். மேலும் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆவார்.
இவ்வாறு உருவான திரைப்படமானது பல்வேறு போராட்டத்திற்கு பிறகு தற்போது திரையில் வெளிவந்துள்ளது.அந்த வகையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை ஏகப்பட்ட பிரச்சனையை சந்தித்து உள்ளது என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
மேலும் இந்த திரைப்படத்தில் தளபதி விஜயின் தந்தை சந்திரசேகர் மற்றும் மகேந்திரன் வைகோ சந்திரசேகர் போன்ற பல்வேறு பழம் பெரும் நடிகர்கள் நடித்துள்ளார்கள்.அந்த வகையில் இந்த திரைப்படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிப்பது மட்டும் இல்லாமல் அவருக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா போலீசாக நடித்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் பழம்பெரும் நடிகர் மகேந்திரன் அவர்கள் அரசியல் சம்பந்தப்பட்ட ராஜதந்திரத்தை மிகச் சிறப்பாக இந்த திரைப்படத்தின் மூலம் நடித்துக் காட்டி இருப்பார்.இவ்வாறு இந்த காட்சியை பார்த்து பலரும் வியந்து போய் விட்டார்கள்.
அந்த வகையில் சமீபகாலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் மதுவந்தியின் தந்தையான ஒய் ஜி மஹேந்திரன் மாநாடு குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அப்போது சிம்பு மற்றவர்களைப் போல மரியாதை தெரியாதவர் கிடையாது. ஏனெனில் அவர் பெரியவர்களிடம் மரியாதையாகவும் அன்பாகவும் பேசுவதில் வல்லவர்.
அதுமட்டுமில்லாமல் அந்த காலத்தில் பழம்பெரும் நடிகர்களான எம்ஜிஆர் சிவாஜி போன்ற முன்னணி நடிகர்கள் வீட்டிற்கு போன் செய்தாலும் சரி அவர்கள் உடனே எடுத்து பதிலளிப்பார்கள். ஆனால் இன்றைய நடிகர்கள் பலரும் ரசிகர்கள் அல்லது பிரபலங்கள் யார் எனும் போன் செய்தால் கூட அவர்களுடைய உதவியாளர்கள்தான் முதலில் எடுகிறார்கள் என தற்போது உள்ள நடிகர்களின் செய்கையை சுட்டிக்காட்டியுள்ளார்.