அஜித்தின் வளர்ச்சியை யாராலும் அவ்வளவு எளிதில் தொட முடியாது – சக நடிகர் வீரா.!

ajith-

நடிகர் அஜித்குமார் அண்மைக்காலமாக  ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வருபவர்  கடைசியாக  வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 61வது திரைப்படத்தில் இரவு / பகல் பார்க்காமல் நடித்து வருகிறார். படமும் ஒரு ஆக்ஷன் திரைப்படமாக தான் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் இதுவரை 90% முடிவடைந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீதி சூட்டிங் சென்னை மற்றும் புனே போன்ற பகுதிகளில் படமாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. படக்குழு சொன்னது போலவே படத்தின் ஷூட்டிங்கை வெகு விரைவிலேயே முடிந்து விட்டு வருகின்ற தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய ரெடியாகிறது. AK 61 இப்படத்தில் அஜித்துடன் இணைந்து இளம் நடிகர் வீரா, மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

அண்மையில் நடிகர் வீரா AK 61 படத்தில் தனது கதாபாத்திரங்களில் முழுமையாக நடித்து முடித்து விட்டு வெளியேறி உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அஜித்துடன் இணைந்து வீரா புகைப்படமும் எடுத்துக் கொண்டார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் வீரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்தை பற்றி வெளிப்படையாக சில கருத்துக்களை கூறியுள்ளார்.

இந்த மனிதருடன் சில நாட்கள் பழகிய பிறகு நல்ல தோற்றமும் நல்ல குணமும் மட்டுமே அவரை இந்த உயரத்தில் நிற்கவைத்து இருக்கவில்லை என்பதை உணர்ந்தேன் பலவருடங்களாக இரத்தம், வியர்வை, மரியாதை, கடும் உழைப்பு, ஆர்வம், நேர்மை, நம்பிக்கை போன்றவற்றையே அவரை மகத்தான நட்சத்திரமாக மாற்றி உள்ளது.

அன்புள்ள AK சார் ஒருவேளை நாம் மீண்டும் சந்திக்காமல் போனால் தற்போது ஒன்று சொல்ல விரும்புகிறேன் நீங்கள் என் வாழ்க்கையில் பெரிய அளவில் நேர்மறைத் தாக்கத்தை உண்டாக்கி உள்ளீர்கள் நாம் பழகிய நாட்களில் நீங்கள் நீங்களாக இருந்து என்னையும் என் இயல்பில் இருக்க விட்டீர்கள். உங்களை சுற்றியுள்ள எல்லோரும் சிறப்பாக வாழ வேண்டும் என நீங்கள் விரும்புவது போல உங்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.