நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் சிறப்பான மற்றும் அதே சமயம் டாப் நடிகர்கள் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தை மிக அசால்டாக எடுத்து நடித்து தனது திறமையை வெளிக்காட்டி தொடர்பு வெற்றியை கண்டு வந்ததால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார் இவர் அண்மையில் கூட நடிகர் கார்த்திக் சுப்புராஜ் உடன் கை கோர்த்தது மகான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரம், வாணிபோஜன், சிம்ரன், பாபி சிம்ஹா மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து இருந்தனர் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் நிறைந்த படமாக உருவானது இந்த திரைப்படம் திரையரங்கில் வெளிவரும் என மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் OTT தளத்தில் வெளியாகியது.
படம் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை மக்கள் மத்தியில் பெற்று போய்க்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா ஆகியோரின் நடிப்பு வேற லெவலில் இருப்பதாக கூறப்படுகிறது இப்படி படம் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க..
மறுபக்கம் பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் நடிகை கஸ்தூரி நடிகர் விக்ரம் நடித்துள்ள மகான் திரைப்படத்தை விமர்சித்துள்ளது தற்போது மிகப்பெரிய ஒரு விஷயமாக மாறி உள்ளது அதில் அவர் கூறி உள்ளது. உண்மையான அப்பா, மகன் நடித்துள்ள திரைப்படங்கள் இதுவரை வெற்றியைப் பெற்றது கிடையாது.
அது போல மகான் திரைப்படத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்தனர் இந்த படமும் அதை உடைக்க தவறிவிட்டது சொல்லப்போனால் வெற்றியை பெறவில்லை என மறைமுகமாக கூறி உள்ளார். மேலும் தனது ரசிகர்களிடம் அப்பா – மகன் நடித்து ஏதேனும் வெற்றி கண்ட திரைப்படம் ஏதாவது இருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.